பான் இந்தியா படத்தில் இணைந்த ஸ்ரேயா

ஸ்ரேயா நடிப்பில் ஏழு மொழிகளில் உருவாகி வரும் கப்ஜா படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா பெங்களூரில் உள்ள மோகன் பி கரே ஸ்டுடியோவில் சமீபத்தில் நடைபெற்றது.

Written by - K.Nagappan | Last Updated : Mar 10, 2022, 03:14 PM IST
  • ஸ்ரேயா நடிப்பில் ஏழு மொழிகளில் உருவாகி வரும் கப்ஜா
  • நிழலுலக அரசனாக உபேந்திரா நடிக்கிறார்
  • ராணியாக ஸ்ரேயா நடிக்கிறார்
பான் இந்தியா படத்தில் இணைந்த ஸ்ரேயா  title=

தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இப்போது பான் இந்தியா படங்கள் வருவது அதிகரித்து வருகிறது. பாகுபலி ஆரம்பித்து வைத்த இந்த ட்ரெண்ட் கேஜிஎஃப், புஷ்பா, ராதே ஷ்யாம், ஆர்ஆர்ஆர் எனத் தொடர்கிறது. ஒரு மொழியில் உருவாகும் படம் அதன் களத்துக்கு ஏற்ப மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் வெளியானால் அதையே பான் இந்தியா படம் என்று சொல்கிறோம். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் அனைத்து இந்திய ரசிகர்களுக்குமான படமாக இருப்பதே பான் இந்தியா படம்.

உதாரணத்துக்கு ஒரு படம் தமிழில் உருவானால் அது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மற்ற மொழிகளிலும் சேர்ந்து இந்தியாவின் 5 முக்கிய மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகும். அஜித் நடிப்பில் உருவான வலிமை படமும், சூர்யா நடிப்பில் உருவான எதற்கும் துணிந்தவன் படமும் பான் இந்தியா படங்களே என்பது கவனிக்கத்தக்கது. மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படமும் பான் இந்தியா படமாக உருவாகி வரும் நிலையில், தொடர்ந்து அவ்வகைப் படங்களுக்கான மார்க்கெட், வியாபாரம் கூடிவருகிறது. 

shriya saran from kabza movie

இந்நிலையில் ஸ்ரேயா சரண் நடிக்கும் கப்ஜா படமும் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் பட்ஜெட் கேஜிஎஃப் பட பட்ஜெட்டை விட அதிகம் என்று கூறப்படுகிறது. கன்னட நாயகர்கள் உபேந்திராவும், சுதீப்பும் நடிக்கும் இப்படத்தை ஆர்.சந்துரு இயக்குகிறார். இரு ஃபிலிம்ஃபேர் விருதுகள், இரண்டு மாநில விருதுகள் பெற்ற சந்துருவின் 12-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, மராத்தி, ஒரியா என 7 மொழிகளில் இப்படம் உருவாகிறது.

மேலும் படிக்க | தவறவிட்ட கமல்; கச்சிதமாகக் கையிலெடுத்த சூர்யா: எதற்கும் துணிந்தவன் படம் எப்படி?

கதைப்படி நிழலுலக அரசனாக உபேந்திரா நடிக்கிறார். ராணியாக ஸ்ரேயா நடிக்கிறார். மேலும் ஒரு நாயகியும் படத்தில் உள்ளார். யார் என்பதைப் படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. ஏ.ஜே.ஷெட்டியின் ஒளிப்பதிவில், கேஜிஎஃப் படத்திற்கு இசை அமைத்த ரவி பஸ்ரூர் இசையில், சிவக்குமாரின் கலை இயக்கத்தில் படம் வேகமாக வளர்ந்து வருகிறது. 

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிப் படங்களிலும் ஸ்ரேயா நடித்துள்ளதால் கப்ஜா படம் தன் மறு வருகையை அழுத்தமாகப் பதிவு செய்யும் என்று நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கிறார். 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News