பிரம்மாண்ட படங்களை தரும் இயக்குநர் ஷங்கர் பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை (Actor Ramcharan) வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜூ தனது வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் மூலம் தயாரிக்கிறார். இதில் ராம் சரண் ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க, ஜெயராம், அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ALSO READ | கடந்த 20 வருடத்தில் பார்க்காத கதை! தளபதி 66 குறித்து கூறிய விஜய்!
இப்படத்தில் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடனமாடும் ஒரு பாடல் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை இவ்வளவு செலவு செய்து தெலுங்கு திரையுலகில் யாரும் பாடல் காட்சிகளை உருவாக்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் கதை வேறு இயக்குநருடையது என்று எழுந்த சர்ச்சையால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பிரச்சனைகள் முடிக்கப்பட்டு ஹைதராபாத்தில் பூஜையுடன் படபிடிப்பு தொடங்கப்பட்டது.
மேலும் இந்த படத்தில் நடிக்க ராம் சரணுக்கு 100 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. ஷங்கர் மற்றும் ராம் சரண் கூட்டணியில் உருவாகும் இந்தப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இந்நிலையில் படக்குழு திட்டமிட்டபடி இந்த ஆண்டிற்குள் படப்பிடிப்பு மற்றும் இதர பணிகளை முடித்துவிட்டு, அடுத்த ஆண்டு(2023) பொங்கலுக்கு பான் இந்தியா படமாக வெளியாகப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் இப்படத்தின் பணிகளை விரைவாக முடித்தபின், இயக்குநர் ஷங்கர் கமல்ஹாசனின் 'இந்தியன்-2' படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் தயாரிப்பாளர் தான் விஜய்யின் 66வது படத்தை தயாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | கெளதம் மேனன் படத்தில் 5 வித கெட்-அப்களில் நடிக்கும் சிம்பு!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR