எழுத்தாளர் வேல. ராமமூர்த்தி எழுதிய நாவல் குற்றப் பரம்பரை. குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக ஆங்கிலேயர்கள் நிறைவேற்றிய சட்டத்தால்; அம்மக்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள் உள்ளிட்ட விஷயங்கள் அந்த நாவலில் இடம்பெற்றிருக்கும்.
தனியார் இதழ் ஒன்றில் கூட்டாஞ்சோறு என்ற தலைப்பில் தொடராக வந்து பிறகு நாவலாக பரிமணித்தது. புத்தக வாசிப்பாளர்களிடையே இப்புத்தகத்துக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது.
இந்தச் சூழலில் இதனை திரைப்படமாக்க இயக்குநர்களான பாரதிராஜாவும், பாலாவும் முயன்றார்கள். ஆனால் இந்த விவகாரத்தில் இருவருக்கும் மோதல் எழுந்தது.
இதனையடுத்து இருவரும் பத்திரிகையாளர் சந்திப்பு தத்தமது விளக்கத்தை அளித்தனர். தொடர்ந்து சாதகமான சூழல் நிலவாததால் இருவருமே அந்த முயற்சியை கிடப்பில் போட்டனர்.
மேலும் படிக்க | “பெண்களின் உதிரம் கொட்டுகிறது. இந்த நாடு உருப்படாது” - ரஜினிகாந்த் பேச்சு
இந்நிலையில் குற்றப் பரம்பரை நாவல் இணைய தொடராக உருவாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிக்க சசிகுமார் இயக்கவிருக்கிறார். விஜயக்காந்த்தின் மகன் சண்முகபாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்கான பணிகள் விரைவில் தொடங்கவிருக்கின்றன.
நீண்ட பஞ்சாயத்துக்கு பிறகு குற்றப் பரம்பரை ஒருவழியாக விஷுவலாக உருவாகவிருப்பதால் குற்றப் பரம்பரை நாவலின் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
மேலும் படிக்க | இளையராஜா பிறந்தநாளில் கோவையில் இருக்கிறது விருந்து
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR