வடிவேலு பாடிய Sing In The Rain - பின்னணி தெரியுமா?

வடிவேலு பாடிய Sing In The Rain பாடலுடைய பின்னணி தெரியவந்திருக்கிறது.  

Written by - க. விக்ரம் | Last Updated : Apr 19, 2022, 05:05 PM IST
  • வடிவேலுவுக்கு நடனம் அமைக்கும் பிரபுதேவா
  • சிங் இன் தி ரெயின் பாடல் பாடிய வடிவேலு
  • 14 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் வடிவேலு பிரபுதேவா
வடிவேலு பாடிய Sing In The Rain - பின்னணி தெரியுமா? title=

வடிவேலு கடந்த சில வருடங்களாக நடிக்காமல் இருந்தார்.இருப்பினும் காமெடி சேனல்களில் இருந்து மீம்ஸ்வரை அவரே ஹீரோவாக திகழ்ந்தார். தற்போது சினிமாவில் மீண்டும் களம் இறங்கியிருக்கும் வடிவேலு, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். 

இந்தச் சூழலில் சமீபத்தில் பிரபுதேவா வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில் மனதை திருடிவிட்டாய் படத்தில் இடம்பெற்ற “சிங் இன் தி ரெயின்” பாடலை வடிவேலு பாடியிருந்தார்.

Vadivelu

வீடியோவை பார்த்த ரசிகர்கள் வடிவேலுவின் பழைய ஃபார்ம் இன்னமும் இருப்பதாக உற்சாகமடைந்தனர். இந்நிலையில் அந்த வீடியோ எடுக்கப்பட்டதன் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் பிரபுதேவா நடன இயக்குநராக ஒரு பாடலுக்கு பணியாற்றுகிறார்.

மேலும் படிக்க | அஜித் 61 கதையை முதலில் கேட்ட ஹீரோ யார் தெரியுமா - விஜய் வெளியிட்ட தகவல்

இந்தப் பாடலுக்காக பிரமாண்ட செட் அமைத்து படமாக்கப்பட்டிருக்கிறது. அப்போதுதான் வடிவேலு “சிங் இன் தி ரெயின்” பாடலை மீண்டும் பாடியிருக்கிறார் என்று தற்போது தெரியவந்திருக்கிறது.

Naai Sekar Returns

ஏற்கனவே பிரபுதேவா வடிவேலுவை போக்கிரி, வில்லு ஆகிய படங்களில் இயக்கியிருக்கிறார். தற்போது நடனத்திலும் அவரை இயக்க இருப்பதால் இந்தக் கூட்டணியில் உருவான பாடலை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க | நெல்சன் - ரஜினி படம் கைவிடப்பட்டதா? உண்மை என்ன

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News