ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு வாழ்த்து அனுப்பிய பிரபல நடிகர்

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விரைவில் ரிலீஸ் செய்ய இருக்கும் பயணி என்ற சிங்கிளுக்கு பிரபல நடிகர் வாழ்த்து அனுப்பியுள்ளார்

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 04:46 PM IST
  • ஐஸ்வர்யா தனுஷுக்கு வந்த வாழ்த்து
  • ஆல்பம் சிறப்பாக இருக்கும் என நம்பிக்கை
  • பயணி வெற்றியடைய பிரபு தேவா வாழ்த்து
 ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு வாழ்த்து அனுப்பிய பிரபல நடிகர் title=

தனுஷூடனான பிரிவுக்குப் பிறகு இயக்குநர் பணியில் தீவிரம் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா, ‘பயணி’ என்ற ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் இந்த ஆல்பம் ரிலீஸாக உள்ளது. அண்மையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவருக்கு மீண்டும் கொரோனா பிரச்சனை ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க | Bigg Boss : கெட்ட வார்த்தையில் திட்டிய அனிதா!! கடுப்பான நிரூப்.. | VIDEO

உடல் நலமான பிறகு பயணி ஆல்பத்தை பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்ய இருக்கிறார். தமிழில் பயணி ஆல்பத்துக்கு பாடலாசிரியர் விவேக் பாடல்கள் எழுத, அனிரூத் இசையமைத்து பாடியுள்ளார். 3 படத்துக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் அனிரூத் காம்போவில் வெளியாகும் இந்த சிங்கிள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆல்பத்துக்கு பிரபல நடிகரும், இயக்குநருமான பிரபு தேவா, ஐஸ்வர்யா தனுஷூக்கு வாழ்த்து அனுப்பியுள்ளார்.

அவர் அனுப்பியுள்ள வாழ்த்து வீடியோவில், ஐஸ்வர்யா தனுஷை பப்பு என அழைத்துள்ளார். பிரபுதேவா பேசும்போது, " ஐஸ்வர்யாவை பப்பு என்று தான் அழைப்பேன். அவர் மிகவும் சலெக்டிவாக மட்டுமே தேர்ந்தெடுப்பார். அப்படிபட்டவர் ‘பயணி’ என்ற ஆல்பத்தை தேர்ந்தெடுத்து பணியாற்றுகிறார் என்றால், அந்த ஆல்பம் மிகவும் சிறப்பாக இருக்கும். 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஐஸ்வர்யாவின் ஆல்பம் ரிலீஸாக இருக்கிறது. ஐஸ்வர்யாவின் டெக்னிக்கல் டீம் பற்றி கேள்விப்பட்டேன். அதில் பணியாற்றுகிறவர்கள் எல்லாம் மிகப்பெரிய ஆட்கள். நிச்சயம் இந்த ஆல்பம் வெற்றி பெறும். ஐஸ்வர்யாவின் குழுவுக்கு என்னுடைய வாழ்த்துகள்" எனத் தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | ரிலீஸூக்கு தயாராகும் சிவகார்த்திகேயனின் 3வது படம்

ஐஸ்வர்யா தனுஷூக்கு பிரபுதேவா அனுப்பியிருக்கும் இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. இந்த ஆல்பத்துக்குப் பிறகு படம் ஒன்றை இயக்க உள்ள ஐஸ்வர்யா தனுஷ், அதில் ஹீரோவாக சிம்பு நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News