பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூல்... முதல் பாகத்தை மிஞ்சியதா... இல்லையா?

Ponniyin Selvan 2 First Day Collection: பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் உலகளவில் நேற்று (ஏப். 28) வெளியான நிலையில், அதன் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Written by - Sudharsan G | Last Updated : Apr 29, 2023, 05:39 PM IST
  • இதன் முதல் பாகம் கடந்தாண்டு வெளியாகி நல்ல வசூலை குவித்தது.
  • முதல் பாகம், அதன் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 40 கோடியை வசூலித்தது.
  • இரண்டாம் பாகம் அதன் வசூல் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்ப்பு.
பொன்னியின் செல்வன் 2 முதல் நாள் வசூல்... முதல் பாகத்தை மிஞ்சியதா... இல்லையா? title=

Ponniyin Selvan 2 First Day Collection: எழுத்தாளர் கல்கியின் மிகவும் புகழ்பெற்ற 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாக கொண்டு, எழுத்தாளர் ஜெயமோகன் வசனத்திலும், குமரவேல், ஜெயமோகன், மணிரத்னத்தின் திரைக்கதையிலும் மணிரத்னம் இரண்டு பாகங்களாக பொன்னியின் செல்வன் படத்தை இயக்கினார். 

பொன்னியின் செல்வன் முதல் பாகம், கடந்தாண்டு செப். 30ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. முதல் பாகம் இரண்டாவது பாகத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது. குறிப்பாக, முதல் பாகம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாயை வசூல் செய்து தற்போது தமிழ் சினிமாவில் அதிகம் தொகையை வசூலித்த படங்களில் இரண்டாவது இடத்தை பிடித்தது. 

மிரட்டும் டிக்கெட் முன்பதிவு

ஆதித்த கரிகாலன், அருண்மொழிவர்மன், குந்தவை, நந்தினி, வந்தியத்தேவன், பூங்குழலி என முன்னணி கதாபாத்திரங்கள் அனைத்தும் ரசிகர்களின் மனதை வென்றன. எனவே, அந்த கதாபாத்திரங்களை இரண்டாம் பாகத்திலும் எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருந்தனர். அந்த வகையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் நேற்று வெளியானது. உலகெமங்கும் பல்வேறு மொழிகளில் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. 

மேலும் படிக்க | Ponniyin Selvan 2 review: பொன்னியின் செல்வன் 2 படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

முதல் பாகம் கொடுத்த பிரமிப்பையும், சுவாரஸ்யத்தை பல மடங்கு அதிகரித்துவிட்டதாக இரண்டாம் பாகத்திற்கும் பலதத் வரவேற்பு கிடைத்துள்ளது. முன்பதிவிலும் இரண்டாம் பாகம் தற்போது முன்னணியில் உள்ளது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முதல் நாள் வசூல் நிலவரம்

முதல் நாளில் இப்படம் மொத்தம் ரூ. 38 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, தமிழ்நாட்டில் இப்படம் முதல் நாளில் ரூ. 25 கோடியை வசூலித்துள்ளது. ஆனால், இதன் முதல் பாகம், முதல் நாளில் மொத்தம் ரூ. 40 கோடியை வசூலித்ததாக கூறப்படுகிறது. 

இரண்டாம் பாகம் நேற்று மட்டும் ஆந்திரா, தெலங்கானாவில் ரூ. 3-4 கோடியும், கர்நாடகாவில் ரூ. 4-5 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் நாளில், முதல் பாகத்தை விட சிறிது குறைவான வசூலை பெற்றாலும், படத்தின் வரவேற்பை பார்க்கும்போது, வரும் நாள்களில் வசூல் ராக்கெட் வேகத்தில் உயர வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது. 

விமர்சனம் ஒருபுறம்

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படம் நாவலை போல அல்லாமல், பல கதாபாத்திரங்களின் தன்மை மாற்றப்பட்டதாகவும், சினிமாவுக்காக செய்யப்பட்ட சமரசங்கள் ஏற்றுக்கொள்ளும்படி இல்லையெனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

அதாவது, படத்தின் சுவாரஸ்யமும் இதனால் குறைந்துவிட்டதாகவும், மக்கள் விரும்பும் வகையிலான போர் காட்சிகள் இல்லாதது பெரும் சுணக்கத்தை கொடுக்கிறது என்றும் சமூக வலைதளங்களில் கருத்துகள் வருகின்றன. இத்தகைய விமர்சனங்கள், நாவலை படித்தவர்களிடம் இருந்தே எழுகிறது. நாவலை படிக்காதவர்களுக்கு இது சிறந்த அனுபவமாக இருக்கும் எனவும் ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | உயிர் உங்களுடையது தேவி... குந்தவை எனும் ஐயன் லேடி - மறக்க கூடாத சோழர் குல இளவரசி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News