மலையாளத்தில் 2020ஆம் ஆண்டு மறைந்த இயக்குனர் சச்சி இயக்கத்தில் பிரித்திவிராஜ் மற்றும் பிஜு மேனன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்த படம் அய்யப்பனும் கோஷியும். இப்படம் வெளியானதிலிருந்து மக்களிடம் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பின் காரணமாக மற்ற மொழிகளில் ரீமேக் வேலைகள் தொடங்கப்பட்டது, அதில் முதலாக தெலுங்கில் பவன் கல்யாண் மற்றும் ராணாவின் நடிப்பில் உருவானது. நீண்ட நாட்களுக்கு முன்பு முடிந்த இப்படத்தின் படப்பிடிப்பு சரியான ரிலீஸ் தேதி இல்லாததால் தள்ளிப்போனது. ஒருவழியாக தற்போது பிப்ரவரி 25ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி உள்ளது.
மேலும் படிக்க | வலிமை படத்தில் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!
அய்யப்பனும் கோஷியும் படத்தை அப்படியே எடுக்காமல் தெலுங்கு ஆடியன்ஸிற்காக சிறிது மாற்றி அமைத்துள்ளனர், குறிப்பாக படத்தின் நீளத்தை 30 நிமிடங்கள் குறைத்துள்ளனர். இதுவே பீம்லா நாயக் படத்தின் முதல் வெற்றி. அய்யப்பனும் கோஷியும் படம் இரண்டு பேரையும் மையமாக வைத்து நகரும். ஆனால் இதில் பவன் கல்யாண் மட்டுமே ஹீரோவாக காட்சிப்படுத்துகிறார். தெலுங்கு சினிமா பாணியில் படம் இருந்தாலும் அது பெரிய உறுத்தலாக தெரியவில்லை. பீம்லா நாயக் என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளார் பவன். கஷ்டப்பட்டு ஹீரோக்களுக்காக மாஸ் பில்டப் சீன்கள் வைத்து நான்கு பேரை அடித்து பறக்க விட்டால் தான் ஹீரோயிஸம் என்று இருந்த நிலையில், பவன் கல்யாண் நடந்துவந்து லுங்கியை மடித்துக் கட்டினாலே திரையரங்கம் அதிர்கிறது.
ஒரு சாதாரண போலீஸ் அதிகாரிக்கும் சமுதாயத்தில் மிகப்பெரிய செல்வாக்கில் இருக்கும் ஒருவருக்கும் இடையே நடக்கும் ஈகோ பிரச்சினையால் இறுதியில் என்ன ஆனது என்பதுதான் பீம்லா நாயக் படத்தின் கதை. தேவையில்லாமல் பிளாஷ்பேக் காட்சிகள் வருகிறது என்று நினைத்தாலும் கிளைமாக்ஸில் அதற்கான காரணத்தையும் சொல்லி விடுகின்றனர். பாகுபலி படத்திற்கு பிறகு ராணாவிற்கு மிகச் சரியான ஒரு கேரக்டர் அமைந்துள்ளது, அதில் தனது வேலையை சிறப்பாகவே முடித்துள்ளார்.
ராணாவின் அப்பாவாக சமுத்திரக்கனி, ஒரு எக்ஸ் எம்பியாக மிரட்டியுள்ளார். இந்த வயதிலும் அவரின் பாடி பிட்னஸ் நம்மளை மிரள வைக்கிறது. இவர்கள் அனைவரையும் தாண்டி நம்மை படத்திற்குள் மூழ்க வைப்பது தமனின் இசைதான். படம் முழுவதும் தனது முழுத் திறமையை காண்பித்துள்ளார் தமன். ஒவ்வொரு முறையும் 'லாலா பீம் லா' என்று பிஜிஎம் வரும்போதெல்லாம் திரையரங்கமே அதிர்கிறது. பவனை தாண்டி இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் வேற லெவல் ஹிட்டினாலும் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. பவன்கல்யாண் நிற்கும் ராணாவிற்கும் இடையே நடக்கும் சண்டை காட்சிகள் மிக அருமையாக படமாக்கப்பட்டிருந்தது, குறிப்பாக லாட்ஜில் பவன் கல்யாணின் சண்டைக்காட்சி சிறப்பாக இருந்தது. பெரிதாக எங்கும் போர் அடிக்காமல் நகரும் திரைக்கதை பீம்லா நாயக்கை காப்பாற்றுகிறது. இந்த வாரம் தெலுங்கு ரசிகர்களுக்கு தீபாவளி தான்.
மேலும் படிக்க | அஜித்துக்கு வலிமை சேர்த்திருக்கிறதா வலிமை? விமர்சனம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR