ஆஸ்கார் மேடையில் கண்ணீர் விட்ட தீபிகா படுகோனே! இதுதான் காரணம்!

Oscar Awards: ரிஹானாவின் லிஃப்ட் மீ அப் பாடலை தோற்கடித்து சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தில் இருந்து 'நாட்டு நாட்டு' பாடல் விருது பெற்றுள்ளது.    

Written by - RK Spark | Last Updated : Mar 13, 2023, 02:43 PM IST
  • ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் கட்டிப்பிடித்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.
  • 'நாட்டு நாட்டு' பாடலுக்கு ஆஸ்கார் கிடைத்ததை கண்டு நடிகை தீபிகா படுகோனே கண்ணீர் வடித்தார்.
  • 'ஆர்ஆர்ஆர்' படக்குழுவினர் தற்போது உற்சாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.
ஆஸ்கார் மேடையில் கண்ணீர் விட்ட தீபிகா படுகோனே! இதுதான் காரணம்! title=

கடந்த ஆண்டு எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த படத்தில் இடம்பெற்றிருந்த 'நாட்டு நாட்டு' பாடல் தற்போது ஆஸ்கார் விருதினை வென்றிருப்பது இந்தியர்களை பெருமையடைய செய்திருக்கிறது.  ரிஹானாவின் லிஃப்ட் மீ அப் ஃப்ரம் பிளாக் பாந்தர்: வகாண்டா ஃபாரெவர், டெல் இட் லைக் எ வுமன், ஹோல்ட் மை ஹேண்ட் ஃப்ரம் டாப் கன்: மேவரிக் மற்றும் திஸ் இஸ் லைஃப் ஃப்ரம் எவ்ரிவேரிக் ஆல் அட் ஆகியவற்றிலிருந்து ரிஹானாவின் லிஃப்ட் மீ அப் பாடலை தோற்கடித்து சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் 'நாட்டு நாட்டு' பாடல் விருது பெற்றுள்ளது.  ஆர்ஆர்ஆர் படக்குழு தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி கொண்டு இருக்க, இந்த பாடலை ஆஸ்கார் மேடையில் நடிகை தீபிகா படுகோனே தொகுத்து வழங்கினார்.  

மேலும் படிக்க | Oscars 2023: இதுவரை அதிக ஆஸ்கார் வென்ற நடிகை யார் தெரியுமா?

நடிகை பெருமையாக தொகுத்து வழங்கியது மட்டுமின்றி இந்த பாடலுக்கு விருது கிடைத்ததை பார்த்து ஆனந்தத்தில் கண்ணீர் விட்ட காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.  95-வது அகாடமி விருது வழங்கும் விழாவில் எம்.எம். கீரவாணியின் பேச்சைக் கேட்டு தீபிகா படுகோனே பெருமிதம் கொண்டார்.  பார்வையார்களோடு ஒருவராக அமர்ந்துகொண்டு நடிகை தீபிகா 'ஆர்ஆர்ஆர்' குழு விருது வாங்குவதை கண்டு பெருமகழ்ச்சி அடைந்தார், இதோடு குழுவினர் ஆஸ்கார் விருது வாங்குவதை கண்டு ஆனந்த கண்ணீர் வடித்தார்.  சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் நாட்டு நாட்டுப் பெயர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டபோது, ஆர்ஆர்ஆர் படத்தின் நாயகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தி கொண்டனர்.  

இந்த வெற்றி அறிவிப்பை கேட்ட ஆர்ஆர்ஆர் இயக்குனர் ராஜமௌலியும் தனது இருக்கையில் இருந்து உற்சாகமாக துள்ளிகுதிக்கும் காட்சியும் பார்ப்பவர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.  ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலை பாடலாசிரியர் சந்திரபோஸ் எழுதியிருந்தார் மற்றும் இந்த பாடலுக்கு இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி இசையமைத்து இருந்தார்.  டால்பி தியேட்டரில் நடைபெற்ற இந்த 95-வது அகாடமி விருது விழாவில் ஆஸ்கார் விருது பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது, இதனை நடிகை தீபிகா படுகோனே தொகுத்து வழங்கினார்.

மேலும் படிக்க | Oscars 2023: ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை நேரலையில் எங்கு? எப்படி பார்ப்பது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News