அவசரத்துக்கு கடன் வேணும்னாலும் இந்த விஷயங்கள் தெரியலைன்னா வம்பு தான்!

Personal Loan Tips : தனிநபர் கடன் வாங்குவதற்கு முன் நீங்கள் உங்களுக்குள்ளே கேட்டுக்கொள்ள வேண்டிய 7 கேள்விகள் இவை. இல்லையெனில் நீங்கள் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

கிரெடிட் கார்டில் கடன் வாங்க விரும்புகிறீர்களா அல்லது வங்கியில் கடன் வாங்க விரும்புகிறீர்களா என்பதை முதலில் முடிவு செய்துக் கொள்ளவும்....

1 /9

தனிநபர் கடன் தேவைப்படும் சூழ்நிலையில், நீங்கள் சில கேள்விகளைக் கேட்க வேண்டும், இல்லையென்றால் பின்னர் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்

2 /9

நீங்கள் கிரெடிட் கார்டில் கடன் வாங்க விரும்புகிறீர்களா அல்லது ஏதேனும் வங்கியில் கடன் வாங்க விரும்புகிறீர்களா என்பதை முதலில் முடிவு செய்துக் கொள்ள வேண்டும்.  இல்லையென்றால் பல மோசடிகளில் ஏதேனும் ஒன்றில் சிக்கிக் கொள்ள வேண்டியிருக்கும்

3 /9

முதலில், எவ்வளவு பணம் தேவை? என்ற கேள்விக்கான பதிலை தெளிவாக தெரிந்துக் கொள்ளுங்கள். கடன் வாங்குவதற்கு முன், உங்களுக்கு எவ்வளவு பணம் தேவை என்று நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். உங்களுக்கு மிகக் குறைந்த பணம் தேவைப்பட்டால், அதை நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கடனாக வாங்கி சமாளிக்கலாம். பணம் கிடைக்கவில்லை என்றால் கிரெடிட் கார்டில் கடன் வாங்கிக் கொள்ளலாம். குறுகிய காலத் தேவைகளுக்கு வங்கியில் கடன் வாங்குவது புத்திசாலித்தனம் அல்ல.

4 /9

கடனைத் திருப்பிச் செலுத்த எவ்வளவு நேரம் எடுக்கலாம்? என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். கடனை எவ்வளவு சீக்கிரம் திருப்பிச் செலுத்துகிறீர்களோ, அவ்வளவு குறைவான வட்டியை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும், ஆனால் மாதாந்திர தவணை எவ்வளவு செலுத்த முடியும் என்பதன் அடிப்படையில் தவணைக் காலத்தை முடிவு செய்யவேண்டும்.  

5 /9

கடன் வாங்கினால் வட்டி கட்ட வேண்டும். குறைந்த விலையில் கடன் பெறுகிறீர்கள் என்பதை முன்கூட்டியே சரிபார்க்க வேண்டும். கடனின் காலத்தைப் பொறுத்து பல நேரங்களில் வட்டி விகிதம் மாறுபடும். எனவே கடன் வாங்கும் முன், இதை மனதில் வைத்து, சரியான காலத்திற்கு சரியான விகிதத்தில் கடனை எடுங்கள் 

6 /9

தனிநபர் கடனை வாங்கும்போது அதற்கு என்னென்ன கட்டணம் விதிக்கப்படும் என்பதை முன்கூட்டியே தெரிந்துகொள்ள வேண்டும். வட்டி விகிதம் குறைவாக இருந்தாலும், செயலாக்க கட்டணம், தாக்கல் கட்டணம், காப்பீடு போன்ற பல்வேறு கட்டணங்களை நீங்கள் செலுத்த வேண்டும். அதன் அடிப்படையில் கடனுக்கு நீங்கள் செலுத்தும் கட்டணங்களின் மொத்த செலவு வட்டி விகிதத்தை விட மிகவும் அதிகமானதாக இருக்கலாம்.

7 /9

கடன் வாங்கும் போது கிரெடிட் ஸ்கோர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்தால், குறைந்த கட்டணத்தில் கடன் பெறலாம். கிரெடிட் ஸ்கோர் எனப்படும் CIBIL ஸ்கோர் அதிகமாக இருந்தால், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் என்பதால் கடன் சுலபமாக கிடைக்கும், நீங்கள் குறைந்த வட்டியில் கடன் பெறாலாம்.

8 /9

எவ்வளவு கடன் தேவை உங்களுக்குத் தேவை என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும். சில வங்கிகள் 10 வினாடிகளில் ஆன்லைனில் கடன்களை வழங்குகின்றன, சில வங்கிகள் கடன் பணத்தை வங்கிக் கணக்கில் மாற்ற 10 நாட்கள் வரை ஆகும். எனவே தேவைக்கேற்ப கடனுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

9 /9

பொறுப்புத் துறப்பு: இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது