கேம் சேஞ்சர்: விஜய்க்கு ஷங்கர் போட்ட கண்டீஷன்! கேட்டவுடன் நோ சொன்ன தளபதி..

First Choice For Game Changer Movie : ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் கேம் சேஞ்சர். இந்த படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்திருக்கிறார். இதில் முதலில் ஹீரோவாக நடித்திருந்தது யார் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Jan 3, 2025, 06:00 PM IST
  • ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கேம் சேஞ்சர் படம்
  • ஹீரோவாக விஜய் நடிக்க மறுத்த விஜய்!!
  • காரணம் என்ன?
கேம் சேஞ்சர்: விஜய்க்கு ஷங்கர் போட்ட கண்டீஷன்! கேட்டவுடன் நோ சொன்ன தளபதி.. title=

First Choice For Game Changer Movie : தமிழ் இயக்குனர் ஷங்கர், தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கும் படம் கேம் சேஞ்சர். இந்தப் படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்த அவருக்கு ஜோடியாக கியரா அத்வானி நடித்திருக்கிறார். எஸ்.ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சுனில், அஞ்சலி, பிரகாஷ்ராஜ் மூடிட்டு போலாம் இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களாக நடித்திருக்கின்றனர். கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கதையை கொஞ்சம் டெவலப் செய்து ஷங்கர் இயக்கியிருக்கும் இந்தப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. 

இந்த படத்தின் வேலைகள் 2021ஆம் ஆண்டு தொடங்கியது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு மேல் இந்த படத்தின் பணிகள் இழுத்து விட்டன. இதையடுத்து, ஒரு வழியாக இந்த படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. இந்த சமயத்தில்தான்  கேம் சேஞ்சர் படத்திற்கும் இன்னொரு பிரபல ஹீரோக்கும் இருக்கும் தொடர்பு கொடுத்து பேசப்பட்டு வருகிறது. 

விஜய்யிடம் கதை சொன்ன ஷங்கர்:

கேம் சேஞ்சர் படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதையடுத்து, இது குறித்து வலைப்பேச்சு பக்கத்தில் அந்தணன் பேசி இருக்கும் தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது. 

கொரோனா சமயத்தில் அனைத்து இயக்குனர்களும் இருக்கும் சில வாட்சப் குரூப்கள் ஆரம்பிக்கப்பட்டதாம். அந்த குழுவில் இருந்த கார்த்திக் சுப்புராஜ், கேம் சேஞ்சர் படத்தின் கதையை கூறியிருக்கிறார். இதனைப் பார்த்த லிங்குசாமி ஷங்கரிடம் இந்த கதையை பற்றி பேசியதாகவும் அவர்கள் அப்படியே இதை கொஞ்சம் மாற்றி அமைத்து போது படமாக உருவாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த படத்தில் நடிக்க முதலில் அணுகப்பட்ட நடிகர், விஜய்தானாம். இந்த கதையைக் கேட்டவுடன் விஜய் மிரண்டு போனதாகவும், ஹீரோவாக நடிக்க தயாராக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் தான் ஷங்கர் விஜய்க்கு ஒரு கண்டிஷனை போட்டிருக்கிறார். இதைக் கேட்டவுடன் தான் விஜய் அந்த படத்தில் இருந்து பின்வாங்கி விட்டாராம். 

ஷங்கர் போட்டோ கண்டிஷன்!

ஷங்கரும் விஜய்யும் ஏற்கனவே நண்பன் படத்தில் சேர்ந்து பணி புரிந்திருக்கின்றனர். இந்தப் படம் 100 நாட்களைக் கடந்த தியேட்டர்களில் ஓடி பாக்ஸ் ஆபீஸில் மகத்தான வெற்றி பெற்று பெரிய ஹிட் அடித்தது. இதை மனதில் வைத்து மீண்டும் ஷங்கருடன் இணையலாம் என காத்திருந்தார் விஜய். ஆனால் இந்த கதையில் நடிக்க வேண்டுமென்றால் ஒன்றரை வருடங்களுக்கு கால்ஷீட் வேண்டுமென்று விஜய்யிடம் ஷங்கர் கால்ஷீட் கேட்டதாக கூறப்படுகிறது. 

அவ்வளவு நாள் தன்னால் கால்ஷீட் தர முடியாத காரணத்தால், படத்தில் தன்னால் நடிக்க முடியாது என விஜய் கூறியதாக வலை பேச்சில் கூறுகின்றனர். இதை அடுத்துதான், விஜய் வாரிசு படத்தில் கமிட் ஆனாராம் இந்த படம் விமர்சன ரீதியாக வறுத்தெடுக்கப்பட்டாலும், பின்னர் வசூலில் குறையேதும் வைக்கவில்லை. 

கேம் சேஞ்சர் திரைப்படம் ரிலீஸிற்கு தயாராக இருப்பதால் படக்குழவினர் ஐதராபாத், சென்னை என பல ஊர்களுக்கு பறந்து வருகின்றனர். 

மேலும் படிக்க | துப்பாக்கி படத்தில் விஜய்க்கு முன் நடிக்க இருந்த ஹீரோ! யார் தெரியுமா?

மேலும் படிக்க | தனி ஒருவன் படத்தில் முதலில் நடிக்க இருந்த ‘அந்த’ நடிகர்! அவ்வளவு பெரிய ஹீரோவா..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News