அர்விந்த் சுவாமி நடிக்கும் ‘நரகாசுரன்’ விரைவில் OTT தளத்தில் வெளியாகிறதா..!!

நரகாசூரன் என்பது  கார்த்திக் நரேன் எழுதி இயக்கியுள்ள த்ரில்லர் படம், பத்ரி கஸ்தூரி தயாரித்த இந்த படத்தில் அரவிந்த் சுவாமி, ஸ்ரியா சரண், சுந்தீப் கிஷன், ஆத்மிகா மற்றும் இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் நடிர்த்துள்ளனர். 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 28, 2021, 04:40 PM IST
அர்விந்த் சுவாமி நடிக்கும் ‘நரகாசுரன்’ விரைவில் OTT தளத்தில் வெளியாகிறதா..!! title=

நரகாசூரன் என்பது  கார்த்திக் நரேன் எழுதி இயக்கியுள்ள த்ரில்லர் படம், பத்ரி கஸ்தூரி தயாரித்த இந்த படத்தில் அரவிந்த் சுவாமி, ஸ்ரியா சரண், சுந்தீப் கிஷன், ஆத்மிகா மற்றும் இந்திரஜித் சுகுமாரன் ஆகியோர் நடிர்த்துள்ளனர். இது நரேனின் "மூன்று த்ரில்லர் படங்களின் தொகுப்பில்" இரண்டாவது படம், முதல் படம் துருவங்கள் பதினாரு. பல்வேறு நிதிக் நெருக்கடிகள் காரணமாக படம் வெளியிடப்படாமல் இருந்தது.

2018 ஆகஸ்ட் 2018 அன்று வெளியிடப்பட்ட டிரெய்லருக்கு நேர்மறையான வரவேற்பு கிடைத்தது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் ஒப்புதல் பெற்ற பின்னர் படம் 31 ஆகஸ்ட் 2018 அன்று வெளியிடப்படும் என்று கார்த்திக் நரேன் அறிவித்தார். 2018 செப்டம்பர் 13ம் தேதிக்கு இதன் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. 

தயாரிப்பாளர்கள் இதன் தெலுங்கு டப்பிங் பதிப்பை பிப்ரவரி 2019 அன்று நாரகாசுருடு என்ற பெயரில் வெளியிட்டனர்.

இந்த லாக்டவுன் சமயத்தில் ஏற்கனவே ஒரு சில படங்கள் OTT  தளத்தில் ரீலீஸ் செய்ய  திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இயக்குனர் கார்த்திக் நரேனின் நரகசூரன்  திறைப்படம் குறைந்தபட்சம் OTT இயங்குதளங்களில் விரைவில் வெளியிடப்படும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.  இந்த பட வெளியீடு நீண்ட காலமாக தாமதமாகி வருகிறது.

அவரது ஸ்லீப்பர் ஹிட் அறிமுகப் படமான 'துருவாங்கள் பதினாரு' படத்திற்குப் பிறகு, இயக்குனர் கார்த்திக் நரேன் இரண்டாவது படம் 'நரகசூரன்' இயக்குவதாக இருந்தார். ஆனால் தாமதம் காரணமாக, இளம் இயக்குனர் அருண் விஜய்யுடன் 'மாஃபியா: அத்தியாயம் 1' ஒன்றை தயாரித்தார், விரைவில் தனுஷுடன் இணைந்து படம் இயக்குவதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ |விஜய் சேதுபதி படத்தின் மாஸ் அப்டேட்: ட்விட்டரில் பகிர்ந்தார் யுவன் ஷங்கர் ராஜா!!

 

இதற்கிடையில், 'நரகசூரன்' OTT இல் வெளியிடப்பட வாய்ப்புள்ளது என்றும் ஜூன் மாதம் Sony LIV-ல் படம் திரையிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மார்ச் மாதத்தில் 'நரகசூரன்' ரீலீஸ் ஆகும் என்று கார்த்திக் நரேன் ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தார், இதை அடுத்து, நகரகாசுரன் படம் OTT வெளியீட்டிற்கு தயாராகிவிட்டது போல் தெரிகிறது.

ALSO READ | வீசி விளையாடும் விஜய் சேதுபதி: வைரலாகும் வீடியோ

 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News