பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் இவர்தான்

பிக்பாஸ் போட்டியில் இந்த வாரம் கதிரவன், ஜனனி, ரச்சிதா, தனலட்சுமி, குயின்ஸி மற்றும் மைனா எலிமிநேஷன் லிஸ்டில் இடம்பெற்றுள்ளனர். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 1, 2022, 11:12 AM IST
  • பிக்பாஸில் இருந்து வெளியேறப்போகும் அடுத்த நபர் யார்.
  • லட்சங்களை சம்பளமாக வழங்கும் பிக் பாஸ் போட்டியாளர்கள்.
  • பிக்பாஸ் 6 வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவரா.
பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் இவர்தான் title=

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து, தற்போது இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.  கடந்த மாதம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் -6 நிகழ்ச்சியிலிருந்து இதுவரை 7 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர்.  முதலில் ஜி.பி.முத்து தானாகவே முன்வந்து விலகினார், அவரை தொடர்ந்து சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி, மகேஸ்வரி, உள்ளிட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதற்கிடையில் சென்ற வாரம் நடைபெற்ற எவிக்‌ஷனில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறி இருக்கிறார். இதற்கிடையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் தனலட்சுமி, ஜனனி, மைனா, ரச்சிதா, குயின்சி, கதிரவன் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். மேலும் இந்த வார கேப்டனாக அஜீம் தேர்வாகி உள்ளார்.

 மேலும் படிக்க | நயன்தாராவை போல் இருக்கும் அவரது ரீல் மகள்...வாவ் வாட் அ ப்யூடி..

இந்நிலையில் இந்த பிக்பாஸ் சீசன் தற்போது ஐம்பது நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் சீசன் துவங்கியபோது இருந்த சுவாரஸ்யம் போக போக இல்லை என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதன் காரணமாக வைல்ட் கார்டு எண்ட்ரியாக பரபரப்பான போட்டியாளரை களத்தில் இறக்க பிக் பாஸ் யோசித்துக்கொண்டு வருகின்றது.

இதற்கிடையில் இந்த வாரமும் முக்கிய போட்டியாளர்களின் பெயர் எவிக்ஷன் லிஸ்டில் உள்ளது. அதன்படி இந்த வாரம் வெளியேறுவார் என்பதை அரிய மக்கள் ஆர்வமாக உள்ள நிலையில் தற்போது வெளியாகியுள்ள செய்தியின் படி இந்த வாரம், மைனா மற்றும் குயின்ஸி குறைந்த வாக்குகள் பெற்றுள்ளதாகவும் இருவருமே டபுள் எவிக்ஷனில் வெளியேறலாம் என்கின்றனர்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nandhini Myna (@myna_nandhu)

மறுபுறம் கதிரவன் தான் இந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது. காரணம் அவர் வீட்டில் இதுவரை சும்மாதான் இருக்கின்றார் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். எனவே யார் இந்த வாரம் வெளியேறுவார் என்பதை கமல்ஹாசன் அவர்களின் கையில் மட்டுமே உள்ளது. அந்தவகையில் வரும் சனி, ஞாயிறு அன்றே இதற்கான முடிவுகள் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மனைவி வெளியிட்ட நிர்வாண புகைப்படம்! பின்னணியை உடைத்த விஷ்ணு விஷால்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News