பல ஆயிரம் குடும்பத்தினரை கவர்ந்த ஜீ தமிழ் தொடர்களுள் முக்கியமான ஒரு தொடர், மீனாட்சி பொண்ணுங்க. மங்கையர் மட்டுமே நிறைந்த ஒரு குடும்பத்தையும் அவர்களின் வாழ்க்கையையும் சுற்று நடக்கும் கதைதான் மீனாட்சி பொண்ணுங்க. விறுவிறுப்பான திருப்பங்களுடன் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று நடக்கவுள்ள விஷயங்களை தெரிந்து கொள்வோமா?
முந்தைய எபிசோடுகளில் நடந்தது என்ன?
மீனாட்சி பொண்ணுங்க கதையின் முக்கிய நாயகன் வெற்றி, கல்யாணத்திற்கு கோட் சூட் போட ஒப்புக்கொள்ள மாட்டான் என்று சரண்யா சக்தியிடம் கூறினாள். ஆனால் காஸ்டியூமர் வீட்டிற்கு வர வெற்றி பூஜாவின் டிரஸ்ஸுக்கு மேட்ச்சாக கோட் சூட் எல்லாம் செலக்ட் செய்ய இதை பார்த்து சக்தி வருத்தம் அடைந்தாள்.
இதையடுத்து சாமி கும்பிடும் சக்தி, அவளின் இக்கட்டான சூழ்நிலையை சாமியிடம் சொல்கிறாள். திருமணத்திற்கு அனைவரும் கிளம்ப, பூஜா சக்தியிடம் இன்று தான் நீ இந்த வீட்டில் இருக்கும் கடைசி நாள் நன்றாக இந்த வீட்டை சுற்றிப் பார்த்துக் கொள் என்று கிண்டலாக சொல்லிவிட்டு போகிறாள். ரங்கநாயகி சக்தியை தன்னுடன் காரில் வரச் சொல்கிறாள். மேலும் மனம் மாறி விட்டேன் என்று நினைக்காதே, கல்யாணம் முடியும் வரை நீ என்னுடன் தான் இருக்க வேண்டும் என்று ரங்கநாயகி சொல்கிறாள். இதையடுத்து என்ன நடக்கவிருக்கிறது என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
மேலும் படிக்க | விஜய் 68 பட அப்டேட் குறித்து சொன்ன ஜீவா!
இன்றைய எபிசோடில் இதுதான் நடக்க இருக்கிறது:
மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய எபிசோடில் சரண்யாவின் அறையில் ஒரு லெட்டர் இருக்கிறது. இதை கணக்குப்பிள்ளை எடுத்து படித்துப் பார்க்க அதில் சரண்யா தான் கர்ப்பம் என்ற உண்மையைச் சொல்லி விட்டு வெளியேறுவதாக எழுதியிருக்கிறது. பிறகு கணக்குப்பிள்ளை அந்த லெட்டரை கொண்டு வந்து சக்தியிடம் கொடுக்கிறார். சக்தி படித்து பார்த்துவிட்டு பதட்டம் அடைகிறாள் .
காணாமல் போன சரண்யா!
ரங்கநாயகி சக்தியிடம் இருந்த லெட்டரை பார்த்து விட்டு என்ன என்று கேட்கிறாள். அதற்கு சரண்யா, கல்யாணத்திற்கு தேவையான பொருட்கள் எழுதி கொடுத்திருக்கிறார்கள், போய் வாங்க வேண்டும் என்று சொல்லி சமாளித்து விடுகிறாள். மண்டபத்தில் இருந்து வெளியே வந்த அவள் ஆட்டோவில் ஏறி சரண்யாவை தேடி போகிறாள். வெற்றி கல்யாணத்துக்கு ரெடி ஆகாமல் சாதாரணமாக இருக்க ரங்கநாயகி அவனை அவசர படுத்தி தயாராக சொல்கிறாள். இதனை தொடர்ந்து சரண்யா ஒரு சித்தரிடம் கர்ப்பம் கலைக்கும் மருந்தை வாங்கி குடிப்பதற்கு தயாராக இருக்க, அந்த நேரத்தில் சக்தி வந்து அதை தட்டி விட்டு புத்திமதி கூறி மீண்டும் கல்யாண மண்டபத்திற்கு அழைத்து செல்கிறாள்.
அடுத்தது என்ன?
சரண்யாவும் சக்தியும் வரும் வழியில் காரில் நீதிமணி, யமுனா மற்றும் துர்காவும் வருகிறார்கள். நீதிமணி கல்யாணத்தை எப்படியும் நான் நிறுத்தி காட்டுகிறேன் பார் என்று சவால் விட்டபடி வருகிறான். இங்கே மண்டபத்தில் பூஜா சக்தியை ஏன் இவ்வளவு நேரம் காணவில்லை கல்யாணத்தை நிறுத்த அவள் ஏதோ ஒரு திட்டம் போடுகிறாள் என நினைத்து சரண்யாவின், ரூமில் இருந்த கடிதத்தை எடுத்து படித்து விடுகிறாள்.
லெட்டருடன் பூஜா மண்டபத்திற்குள் வர ரங்கநாயகி லெட்டரை பற்றி விசாரிக்க பூஜா அதிர்ச்சியுடன் இருக்க அப்பொழுது அங்கு சக்தி வருகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய இரவு 9:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மீனாட்சி பொண்ணுங்க சீரியலை காணத்தவறாதீர்கள்.
மேலும் படிக்க | லியோ படத்தில் இணையும் விக்ரம் பட வில்லன்! அப்போ LCU கன்பார்ம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ