'ஏகே61' படத்தில் இணையப்போகும் 'அசுரன்' பட பிரபலம்?

அசுரன் படம் மூலம் பிரபலமான மஞ்சு வாரியார் 'ஏகே61' படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 5, 2022, 06:54 PM IST
  • அஜித் ak61 படத்தில் நடித்து வருகிறார்.
  • இந்த வருடமே இப்படம் வெளியாக உள்ளது.
  • அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
'ஏகே61' படத்தில் இணையப்போகும் 'அசுரன்' பட பிரபலம்? title=

அஜித் நடிப்பில் உருவாகும் 'ஏகே61' படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.  வலிமை படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஹெச்.வினோத், அஜித் மற்றும் போனி கபூர் ஆகியோரது கூட்டணியில் இப்படம் உருவாகி வருகிறது.  இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதை தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குனர் ஹெச்.வினோத் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.  இந்த படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும், வங்கி கொள்ளையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.  இப்படத்திற்காக அஜித் 60 நாட்கள் தனது கால்ஷீட்டை ஒதுக்கியுள்ளார்.

மேலும் படிக்க | சூர்யா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

தற்போது இப்படம் பற்றிய அப்டேட் என்னவென்றால், தனுஷ் படத்தில் வெளியான 'அசுரன்' படத்தின் மூலம் அனைவரது மனதையும் வென்ற மஞ்சு வாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  இவரது நடிப்பு தமிழ் ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்தது, இந்நிலையில் இவர் அஜித்துடன் இணைந்து நடிக்கப்போவதாக வெளியாகியுள்ள செய்தி ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.  இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் இன்னும் வெளியிடவில்லை, மேலும் இப்படம் தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் இப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் அஜித் வயதான பேராசிரியர் கதாபாத்திரத்திலும், மற்றொன்றில் இளம் வயதினராகவும் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.  'ஏகே61' படத்தை தொடர்ந்து அஜித்குமார், விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.  இதில் அனிருத் இசையமைக்கிறார், இப்படத்தின் மூலம் அனிருத் நான்காவது முறையாக அஜித் நடிக்கும் படத்தில் இசையமைக்கிறார்.  வெளியான தகவல்களின்படி, இப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது, இந்தாண்டு இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு 2023ம் ஆண்டின் பாதியில் இப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | Beast vs KGF-2: இறுதியில் தமிழ்நாட்டில் வென்றது யார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News