96வது ஆஸ்கர் விருது விழா: இந்தியா சார்பில் '2018' மலையாள படம் தேர்வு

2024ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு மலையாள படமான '2018' படம் இந்திய சார்பில் அனுப்ப தேர்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 27, 2023, 02:09 PM IST
  • மலையாளப் படம் ‘2018’ ஆஸ்கர் விருது விழாவில் இந்தியா சார்பில் பங்கேற்கிறது.
  • இப்படத்தில் குஞ்சாக்கோ போபன், டோவினோ தாமஸ், ஆசிப் அலி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
  • மே 5, 2023 அன்று திரையரங்குகளில் வந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
96வது ஆஸ்கர் விருது விழா: இந்தியா சார்பில் '2018' மலையாள படம் தேர்வு title=

ஆஸ்கர் விருது போட்டிக்கு இந்தியா சார்பில் ‘2018 எவேர்யோனே ஐஸ் எ ஹீரோ’ என்ற மலையாள படம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

2018 எவேர்யோனே ஐஸ் எ ஹீரோ:
ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் மே 5ஆம் தேதி வெளியான மாலிவுட்டின் மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படம் 2018 Everyone Is A Hero. இதில் டோவினோ தாமஸ், ஆசிப் அலி, குஞ்சாகோ போபன், லால், நரேன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, தன்வி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இயக்குனர் ஜூட், 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கேரளா மாநிலம் முழுவதும் ஏற்பட்ட வெள்ளத்தை இந்த படத்திற்குள் உருவாக்கி பார்வையாளர்களுக்கு அந்த பயங்கரமான தருணங்களை மீண்டும் வழங்கி வெற்றி பெற்றார். 

காவ்யா பிலிம் கம்பெனி மற்றும் பிகே பிரைம் புரொடக்ஷன்ஸ் ஆகியவற்றின் கீழ் வேணு குன்னப்பிள்ளி, சி கே பத்மகுமார் மற்றும் ஆண்டோ ஜோசப் ஆகியோர் இப்படத்தை தயாரித்திருந்தனர். 

மேலும் படிக்க | துல்கர் சல்மானின் “கிங் ஆஃப் கொத்தா” ஓடிடி ரிலீஸ் எப்போது?

மற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் தயாரிப்பு வடிவமைப்பாளர் மற்றும் கலை இயக்குனர்: மோகன்தாஸ், DOP: அகில் ஜார்ஜ், எடிட்டர்: சமன் சாக்கோ, லைன் தயாரிப்பாளர்: ஹோபகுமார் ஜி.கே, தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: ஸ்ரீகுமார் சென்னிதலா, தலைமை இணை இயக்குனர்: சைலக்ஸ் ஆபிரகாம், PRO & சந்தைப்படுத்தல்: வைசாக் சி வடக்கேவீடு: டிஜிட்டல் தனய் சூர்யா. 

2018 திரைப்படத்தின் வசூல் நிலவரம்:
'2018 Everyone Is A Hero' என்ற மலையாள திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் அதிக வசூல் பெற்று பிளாக்பஸ்டர் சாதனை பெற்றது. இப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. அதன்படி வெறும் 30 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

 

ஆஸ்கர் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்ட 2018:
இந்நிலையில், 96வது ஆஸ்கர் விருது விழா (96th Academy Awards) அடுத்த ஆண்டு மார்ச் 10 அன்று லாஸ் ஏஞ்சல்ஸின் ஓவேஷன் ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற உள்ளது. அந்த விருது விழாவுக்கு இந்தியா சார்பில் போட்டியிட மலையாள திரைப்படமான 2018 படத்தை இந்திய தேர்வுக் குழு தேர்வு செய்துள்ளது.

 

முன்னதாக கடந்த ஆண்டு குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' (Chhello Show) படம் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த படம் விருது பெறவில்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்ட 'ஆர்.ஆர்.ஆர்' படம் சிறந்த பாடலுக்கான பட பிரிவில் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க | ரஜினிக்கு முன்பு ஜெய்லர் படத்தில் நடிக்க இருந்த ஹீரோ யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News