பிரபல நடிகர் டி.ஜி.ரவியின் மகன் ஸ்ரீஜித் ரவி, 2005 ஆம் ஆண்டு மலையாள திரையுலகில் நுழைந்தார். அதன் பின்னர் இவர் மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதேபோல் தமிழிலும், கும்கி, கதக்களி ஆகிய திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில், கடந்த ஜூலை 4 ஆம் தேதி, கேரள மாநிலத்தின் கலாச்சார தலைநகரான திருச்சூரில் உள்ள ஒரு பூங்காவில் கருப்பு காரில் வந்த நபர் ஒருவர், அங்கு விளையாடிக்கொண்டிருந்த 14 வயது மற்றும் 9 வயதுடைய இரண்டு குழந்தைகள் முன்பு அநாகரீகமாக நடந்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டது. அப்புகாரில் அந்த நபர் 2 குழந்தைகள் முன்பு தனது அந்தரங்க பகுதியை வெளிகாட்டினார் எனவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, குழந்தைகளின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பின்புல விசாரணையும் நடத்தப்பட்டது. அப்போது திருச்சூர் மேற்கு போலீசார் சம்பவம் நிகழ்ந்த இடத்தின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர். சிசிடிவியில் அந்த கருப்பு காரின் நம்பர் பிளேட்டை ஜூம் செய்ய முடிந்தது.
அதன்பின்னர், காரின் நம்பர் பிளேட்டை வைத்து குற்றம் சாட்டப்பட்டவரின் முகவரியை பெற்ற போலீஸார், குற்றம் சுமத்தப்பட்டவரின் வீட்டிற்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போதுதான் சிறுவர்களிடம் அநாகரிகமாக நடந்துக்கொண்டது நடிகர் ஸ்ரீஜித் ரவி என்பது தெரிய வந்தது.
பின்னர் நடிகர் ஸ்ரீஜித் ரவியை போலீஸார் காவலில் எடுத்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, ஸ்ரீஜித், தான் 'நடத்தைக் கோளாறு' என்ற நோயால் அவதிப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அவரது நோய்க்கு மருத்துவ உதவி கிடைப்பதை அவரது குடும்பத்தினர் உறுதிசெய்யும் நிபந்தனையின் பேரில் ஜாமின் வழங்குமாறும் ஸ்ரீஜித் ரவி தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இந்த காரணத்தை ஏற்றுக்கொண்ட கேரள உயர்நீதிமன்றம் அவருக்கு இன்று நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மேலும் உரிய மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்ளுமாறு நடிகர் ஸ்ரீஜித்தை நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நாற்பத்தாறு வயதான ஸ்ரீஜித் ரவி, 2016-ம் ஆண்டு இதேபோன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் படிக்க | இந்தியாவிற்குள் நுழைந்த குரங்கு அம்மை; ‘இந்த’ அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கை தேவை
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ