கமல் ஆட்டம் ஆரம்பம்! நாளை "விக்ரம்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறது

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் "விக்ரம்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 9, 2021, 08:46 PM IST
கமல் ஆட்டம் ஆரம்பம்! நாளை "விக்ரம்" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறது title=

விக்ரம் ஃபர்ஸ்ட் லுக்: லோகேஷ் கனகராஜ் இயக்கியத்தில் உலக நாயகன் நடிக்கும் "விக்ரம்" படம் குறித்து முக்கிய அறிவிப்பை படத்தின் இயக்குனர் வெளியிட்டுள்ளார். ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிபில் "அதிரடி ஆக்சன் திரில்லர் படமாக உருவாகி வரும்  விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியிடப்படும்.

நாளை மாலை 05:00 மணிக்கு விக்ரம் (Vikram Movie) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். #Vikram மற்றும் #arambichitom என்ற ஹேஷ்டேக்குகளையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஹேஷ்டேக்குகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

 

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.  இசை அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். 

ALSO READ | Kamal Haasan-னின் விக்ரம் படம்: மாஸ் அப்டேட் அளித்த லோகேஷ் கனகராஜ்

இந்த படம் 1986 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான "விக்ரம்" திரைப்படத்தின் கதை அல்ல. ஆனால் அந்த படத்தின் பெயரை இங்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. 

நீண்ட இடைவெளிக்கு உலக நாயகன் கமல்ஹாசன் (Kamal Haasan) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக உள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News