லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ படம், இதுவரை பல பிரச்சனைகளை சந்தித்துள்ளது. இதனால், நடிகர் விஜய்யும் பல விமர்சனங்களை எதிர்கொண்டார். அவை என்னென்ன பிரச்சனைகள் தெரியுமா?
லியோ திரைப்படம்:
லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்துள்ள படம், லியோ. இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் இணைந்து ‘மாஸ்டர்’ படத்தில் பணியாற்றினர். லியோ படம், வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில், விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். முக்கிய கதாப்பாத்திரங்களில் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் வெளியாவதற்கு முன்னரே பல விமர்சனங்களையும் சர்ச்சைகளையும் சந்தித்துள்ளது. அவை என்னென்ன சர்ச்சைகள் தெரியுமா..?
பாடல் சர்ச்சை:
லியோ படத்தின் முதல் சிங்கிளாக ‘நான் ரெடி’ பாடல் வெளியானது. இந்த பாடல், விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியானது. லிரிக்கல் வீடியோவாக வெளியான இந்த பாடலில், விஜய் வாயில் சிகிரெட்டை வைத்துக்கொண்டு புகைப்பிடிப்பது போன்ற புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இதையடுத்து, அரசியல் கட்சியை சேர்ந்தவர்களில் இருந்து பொது மக்கள் வரை, பலர் நடிகர் விஜய்யை நேரடியாக அட்டாக் செய்தனர். இதையடுத்து, “புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு” எனும் வாசகம் லிரிக்கல் வீடியோவில் இணைக்கப்பட்டது. அது மட்டுமன்றி, நான் ரெடி பாடலில் மதுவை ஆதரிக்கும் வகையில் இடம் பெற்றிருப்பதாக கூறி, சில வரிகளை படத்தில் இருந்து தணிக்கை குழுவினர் நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது
டிரைலரில் இடம் பெற்றிருந்த தகாத வார்த்தை:
லியோ படத்தின் டிரைலர், சமீபத்தில் வெளியானது. இதில், நடிகர் விஜய் பெண்களை இழிவு படுத்தி பேசும் ஒரு தகாத வார்த்தையை பேசியிருந்தார். இது, ரசிகர்கள் மட்டுமன்றி அவர் மீது ஏற்கனவே வன்மம் வைத்துள்ள சிலர் மத்தியிலும் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இந்த வார்த்தையை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறி பலரும் போர் கொடி தூக்க ஆரம்பித்தனர். அதன் பிறகு, படத்தில் இருந்து இந்த வார்த்தை நீக்கப்பட்டு விடும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.
விஜய் சந்தித்த விமர்சனம்:
நடிகர் விஜய் நான் ரெடி பாடலில் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்களை ஆதரிப்பதாக கருத்துகள் எழுந்தது. அப்பாடல் வருவதற்கு சில தினங்களுக்கு முன்பாகத்தான் மாணவர்களை சந்திக்கும் நிகழ்வு நடந்தது. சிறு குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய இவரே இப்படி நடந்து கொள்ளலாமா என சிலர் விஜய்யை விமர்சித்தனர்.
மேலும், விஜய் தகாத வார்த்தை பேசியதற்கும் பலர் கண்டனம் தெரிவித்தனர். அரசியலிக்குள் விஜய் பிரவேசம் செய்வதாக கூறப்படும் நிலையில், “தலைவராக தயாராகிக்கொண்டிருக்கும் இது போன்ற வார்த்தைகளை பேசி நடிக்கலாமா..?” என்றும் சிலர் கேள்வி எழுப்பினர்.
நிறுத்தப்பட்ட இசை வெளியீட்டு விழா:
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், 7,000 பேர் அனுமதிக்கப்படும் அரங்கில் 70 ஆயிரம் பேர் டிக்கெட்டுகள் வேண்டும் என கேட்டிருப்பதாக கூறப்பட்டது. இதற்கு ஏற்ற பாதுகாப்பினை தமிழக காவல் துறையினரால் அளிக்க முடியாது என கூறிவிட்டதாகவும் சொல்லப்பபடுகிறது. இறுதியில், லியோ இசை வெளியீட்டு விழா தடைப்பட்டு போனது.
ஸ்பெஷல் ஷோக்கள் இல்லை..
லியோ படத்திற்கு 4 மணி காட்சிகள் மற்றும் 7 மணி காட்சிகள் வேண்டும் என கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, 9 மணிக்குதான் முதல் காட்சி தொடங்கும் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனால், விஜய் ரசிகர்கள் அனைவரும் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும் படிக்க | ‘லியோ’ படத்தில் நடிக்க விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு? முழு விவரம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ