முடிவுக்கு வந்தது நயன்தாரா- NETFLIX விவகாரம்! - வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்!

நடிகை நயன்தாரா- இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபரத்தில் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்றது.

Written by - ஜெ.வி.பிரவீன்குமார் | Last Updated : Jul 21, 2022, 01:08 PM IST
  • நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்றது.
  • திருமண நிகழ்வை ஒளிபரப்பும் உரிமையை நெட்ப்ளிக்ஸ் பெற்றுள்ளது
  • திருமண வீடியோ வெளியீடு தொடர்பாக புதிய தகவல் வெளியாகியுள்ளது
முடிவுக்கு வந்தது நயன்தாரா- NETFLIX விவகாரம்! - வெளியானது லேட்டஸ்ட் அப்டேட்! title=

நடிகை நயன்தாரா- இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபரத்தில் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்றது.

கடும் கட்டுப்பாடுகளுடன் நடந்த இத்திருமணத்தில்  வரவேற்பு அழைப்பிதழ் வைத்திருந்த பிரபலங்கள் மட்டும் கலந்துகொண்டனர்.  திருமண நிகழ்வின் ஒளிபரப்பு உரிமத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ப்ளிக்ஸ் வாங்கிவைத்திருந்ததன் காரணமாக திருமண அரங்குக்குள் செல்போனில் படம் பிடிக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோல பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. 

இத்திருமணத்துக்கான சாப்பாடு, ஓட்டல் அறைகள், டெக்கரேஷன், மேக்-அப், பாதுகாப்பு  உள்ளிட்ட செலவுகளை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம்தான் பார்த்துக்கொண்டதாகவும் அந்த வகையில் சுமார் 25 கோடி ரூபாய் வரை அந்நிறுவனம் செலவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.  

இதனிடையே நயன்தாராவின் திருமணம் ஓடிடியில் எப்போது வெளியாகும் எனும் எதிர்பார்ப்பு இருந்துவந்தது ஆனால்  சுமார் ஒரு மாத காலம் ஆன பிறகும் கூட வீடியோ வெளிவராததால் பலருக்கும் பல்வேறு சந்தேகங்கள் எழ ஆரம்பித்தன. நெட்பிளிக்ஸுக்கும் நயன்தாரா தரப்புக்கும் இடையே ஒப்பந்தம் தொடர்பாக ஏதேனும் மனக்கசப்புகள் இருக்கலாம் எனவும் அதுதான் தாமதத்துக்கான காரணமாக இருக்கலாம் எனவும் சொல்லப்பட்டது.

இந்நிலையில் இவ்விவகாரத்தில் புதிய அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது, நயன்தாரா- விக்னேஷ் சிவன் காதல் அனுபவங்கள் டாகுமெண்டரி படமாக எடுக்கப்பட்டுவருகிறதாம். இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் இந்த டாகுமெண்டரி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளதாம்.

மேலும் படிக்க| திருமணம் முடிந்து ஒரு மாதம் நிறைவு- புதிய புகைப்படங்களை ரிலீஸ் செய்த விக்கி!

இது திருமண நிகழ்வுடன் கூடிய டாகுமெண்டரியா அல்லது அவ்விருவர் இடையேயான காதல் கதையை மட்டும் வைத்து உருவான டாகுமெண்டரியா எனும் விவரம் இன்னும் முழுமையாகத் தெரியவரவில்லை. அதேநேரம் டாகுமெண்டரி ஒளிபரப்பப்பட உள்ளதாக வெளியாகியுள்ள இத்தகவல், நயன்தாரா- நெட்ப்ளிக்ஸ் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது என்றே சொல்லலாம்.

எனவே நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமண வீடியோவை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் படிக்க | ‘வாரிசு’ படத்தில் விஜய்க்கு இப்படியொரு ரோலா? அதுவும் இதுவரை பண்ணாத கேரக்டர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News