நயன்தாரா vs த்ரிஷா! 2024-ல் அதிக சம்பளம் வாங்கிய நடிகை யார் தெரியுமா?

Kollywood Tamil Actress In 2024 : தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளாக விளங்குபவர்கள் நயன்தாராவும் திரிஷாவும்தான். இவர்களில் இந்த ஆண்டு அதிகம் சம்பளம் வாங்கியவர்கள் யார் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Dec 7, 2024, 02:28 PM IST
  • நயன்தாரா vs த்ரிஷா
  • இந்த ஆண்டில் அதிக சம்பளம் வாங்கியவர் யார்?
  • நீங்கள் நினைப்பவரா?
நயன்தாரா vs த்ரிஷா! 2024-ல் அதிக சம்பளம் வாங்கிய நடிகை யார் தெரியுமா?  title=

Kollywood Tamil Actress In 2024 : கோலிவுட் திரை உலகை பொருத்தவரை கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கும் மேலாக நயன்தாரா மற்றும் திரிஷா ஆகியோர் தான் முன்னணி நடிகைகளாக விளங்கி வருகின்றனர். எத்தனையோ புதிய ஹீரோயின்கள் வந்திருந்தாலும், இவர்களது மார்க்கெட் மட்டும் எப்போதும் உச்சத்தில் இருக்கிறது. 

நயன்தாரா vs த்ரிஷா:

நயன்தாராவும் த்ரிஷாவும் தமிழில் நடிக்க வந்தது வெவ்வேறு ஆண்டுகளில் தான். ஆனால் இருவருக்கும் பொதுவான விஷயம், இவர்கள் இருவருமே மாடலாக இருந்து திரையில் நுழைந்தவர்கள். . இருவரும் திரைக்கு வந்த சில காலங்களிலேயே, அப்போது முன்னணி நடிகர்களாக விளங்கிய பலருடன் இவர்கள் ஜோடியாக நடித்திருக்கின்றனர். 

பொதுவாக ஹீரோக்கள் போல அல்லாமல், ஹீரோயின்களுக்கு 30 அல்லது 35 வயதாகி விட்டாலே, அவர்களை திரையுலகை விட்டு ஒதுக்கும் வகையில் பட வாய்ப்புகளை கொடுக்காமல் இருப்பர். ஆனால், அந்த வரலாற்றை மாற்றி எழுதியவர்கள், த்ரிஷா-நயன்தாரா. இருவருக்கும் இப்போது 40 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும் இயக்குநர்கள் பலர் இவர்களுக்கு கதை கூறுவதற்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர். இவர்கள் போட்டி நடிகைகளாக பார்க்கப்பட்டாலும், இயல்பில் இருவரும் நல்ல தோழிகளாக இருக்கின்றனர். 

2024-ல் அதிக சம்பளம் வாங்கியவர் யார்? 

இந்த வருடத்தில், தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கிய நடிகை யார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அவர், நயன்தாராவாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த வருடத்தில் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் பல படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். இந்த படங்களின் ஷூட்டிங் தற்போது நடைப்பெற்று வருகின்றன. இருப்பினும், இதில் ஒரு சில படங்களின் பணிகள் தாமதமாகி வருகிறது. 

நடிகை த்ரிஷாதான், இந்த ஆண்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக இருப்பதாக கூறப்படுகிறது. இவர் இந்த ஆண்டில் மட்டும் குட் பேட் அக்லி, விடாமுயற்சி, தக் லைஃப், சூர்யா 45, விஷ்வாம்ப்ரா, ஐடண்டிடி உள்ளிட்ட 6 படங்களில் கமிட் ஆகியிருக்கிறார். இதில், தக் லைஃப் படத்திற்காக மட்டும் ரூ.12 கோடி வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | 2024-ல் முதல் நாளிலேயே அதிக வசூல் பார்த்த டாப் 5 தமிழ் படங்கள்! முதல் இடத்தில் யார் படம்?

இந்த ஆண்டில் நடித்த படம்!

கடந்த ஆண்டு லியோ படத்தில் மட்டும்தான் த்ரிஷா நடித்திருந்தார். இந்த படம் பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்த ஆண்டும் விஜய்யுடன் சேர்ந்து, தி கோட் படத்தில் மட்ட பாடலுக்காக நடனமாடினார். அவர் நடித்திருக்கும் பிற படங்கள், அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது.  தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் சூர்யா 45 படத்திலும் கமிட் ஆனார். இந்த படத்தில் அவர் சூர்யாவிற்கு ஜோடியாக, வக்கீல் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தை, ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். சூர்யா கடைசியாக நடித்திருந்த கங்குவா படம் பெரும் தோல்வி அடைந்ததால், இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க | 2024-ல் வெளியான டாப் 5 தமிழ் திரைப்படங்கள்! முதல் இடத்தில் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News