வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா?

Latest News Vettaiyan Movie Release Date : ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் வேட்டையன் படத்தின் முக்கிய அப்டேட் தற்போது வெளியாகியிருக்கிறது.   

Written by - Yuvashree | Last Updated : Aug 19, 2024, 10:24 AM IST
  • வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
  • கங்குவா படத்துடன் மோதுகிறது..
  • எந்த தேதியில் வெளியாகிறது தெரியுமா?
வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! எப்போது தெரியுமா? title=

Latest News Vettaiyan Movie Release Date :தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினிகாந்த், வேட்டையன் படத்தில் ஹீரோவாக நடித்திருக்கிறார். டிஜே ஞானவேல் இயக்கியிருக்கும் இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. 

எப்போது ரிலீஸ்?

வேட்டையன் திரைப்படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனம் இன்று ஒரு அறிவிப்பினை வெளியிட்டிருக்கிறது. அதன்படி, வரும் அக்டோபர் மாதம் 10ஆம் தேதி இப்படம் உலகெங்கிலும் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படம், தமிழ் மட்டுமன்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளிலும் வெளியாகிறது. 

படத்தில் நடிக்கும் முன்னணி நட்சத்திரங்கள்:

வேட்டையன் திரைப்படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர். பாலிவுட் சூப்பர் ஸ்டார், அமிதாப்பச்சன் பல ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினிகாந்த் உடன் வேட்டையன் படத்தில் கைகோர்த்து இருக்கிறார். அது மட்டும் இன்றி தென்னிந்திய திரையுலகில் கவனம் இருக்கும் நடிகராக வலம் வரும், பகத் பாசில், இதில் முக்கிய கதாபாத்திரமாக வருகிறார். இவர்களுடன், தெலுங்கு நடிகர்கள் ராணா, சர்வானந்த் உள்ளிட்டோர் வருகின்றனர். 

மலையாள நடிகை மஞ்சு வாரியர், நடிகை ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோரும் வேட்டையன் பாடத்தில் நடித்திருக்கின்றனர். படம் அறிவிப்பிற்கு பிறகு வெளியான நடிகர்களின் பட்டியலே ரசிகர்களுக்கு இப்படம் குறித்த பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. 

மேலும் படிக்க | ரஜினிகாந்தை விட அதிக சம்பளம் வாங்கிய முன்னணி நடிகை! யார் தெரியுமா?

கங்குவா Vs வேட்டையன்: 

இந்த வருடத்தின் தீபாவளி, வரும் அக்டோபர் மாதம் கொண்டாடப்படுகிறது. இதைக்குறிவைத்து பல தமிழ் படங்கள் வெளியாக இருக்கின்றன. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படமும் அக்டோபர் மாதத்தில்தான் வெளிவருகிறது. இந்த நிலையில், சூர்யா நடிப்பில் உருவான கங்குவா திரைப்படமும் அக்டோபர் 10ஆம் தேதிதான் வெளியாகிறது. இந்த படத்திற்கு போட்டியாக தற்போது வேட்டையன் படமும் ரிலீஸ் ரேஸில் இறங்கியிருக்கிறது. இதை, ரசிகர்கள் டபுள் திரை விருந்தாக கருதி வருகின்றனர். இரண்டில் எது வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

இஸ்லாமியராக ரஜினிகாந்த்?

நடிகர் ரஜினிகாந்த், வேட்டையன் திரைப்படத்தில் இஸ்லாமியராக நடிப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு காவல் அதிகாரி கதாப்பாத்திரம் என்றும், இது ஒரு ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக இருக்கும் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. ரஜினி, ஏற்கனவே லால் சலாம் படத்தில் இஸ்லாமியராக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஜெய் பீம் இயக்குனரின் படைப்பு: 

2022 ஆம் ஆண்டு விழாவில் சமுதாயத்தில் புரட்சியை ஏற்படுத்திய படம் ஜெய் பீம். சூர்யா நடித்திருந்த இந்த படம் மக்களின் ஆதரவை பெற்றதை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் உடன் கைகோர்த்தார். இதனால் படத்தை ரஜினிகாந்திற்காக பார்ப்பதை விட கதைக்காக பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர். 

மேலும் படிக்க | ரஜினியின் ‘வேட்டையன்’ படத்துடன் மோதும் இன்னொரு பெரிய படம்! எது தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News