தளபதி 69 படத்தில் விஜய்யுடன் நடிப்பவர்கள் யார்? கதை என்ன? முழு விவரம்!

Latest News Thalapathy 69 Cast And Crew Update : நடிகர் விஜய்யின் கடைசி படமான தளபதி 69-ல், யார் யார் நடிக்கின்றனர் தெரியுமா?  

Written by - Yuvashree | Last Updated : Sep 13, 2024, 02:01 PM IST
  • தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
  • விஜய்யுடன் நடிப்பது யார் யார்?
  • கதை என்ன? இதோ விவரம்!
தளபதி 69 படத்தில் விஜய்யுடன் நடிப்பவர்கள் யார்? கதை என்ன? முழு விவரம்! title=

Latest News Thalapathy 69 Cast And Crew Update : முழு நேரமாக அரசியலில் ஈடுபட இருக்கும் நடிகர் விஜய், தனது கடைசி படத்தில் விரைவில் நடிக்க இருக்கிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்த படத்தை அனைவரும், தளபதி 69 என அழைத்து வருகின்றனர். 

தளபதி 69 திரைப்படம்:

30 வருடங்களாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். நார்மலான பக்கத்து வீட்டு பையன் போல ஃபீல் ஆகும் விஜய்க்கு தமிழ் திரையுலகை தாண்டி தென்னிந்திய அளவில் இவருக்கு அதிகமாக ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. கடைசியாக தி கோட் படத்தில் நடித்த அவர், அடுத்து தனது கடைசி படத்தில் நடிக்க இருக்கிறார். 

தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்று (செப்டம்பர் 13) மாலை 5 மணியளவில் வெளியாக இருக்கிறது. இது குறித்து, கேவிஎன் ப்ரெடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறது. அதில், தாங்கள் முதன் முறையாக தமிழ் படத்தைஇ இயக்க இருப்பதாக அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கின்றனர். 

நடிப்பது யார் யார்? 

தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாக இருப்பதை தொடர்ந்து அப்படம் குறித்த தகவல்கள் தற்போது வைரலாகி வருகிறது. நடிகர் விஜய், இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்பதும், ஹெச்.வினோத் இப்படத்தை இயக்குகிறார் என்பதும் அனைவருக்கும் தெரிந்த கதை. இது தவிர, படத்தில் இருப்பது யார் யார்? கதை என்ன? முழு விவரத்தை இங்கு பார்ப்போம். 

இசையமைப்பாளர் யார்?

விஜய்யுடன் இதற்கு முன்னர் ஏற்கனவே பல படங்களில் சேர்ந்து பணியாற்றியிருப்பவர், அனிருத். இவரை ரசிகர்கள் பலர் ‘அனில்’ருத் என்று கூட அழைப்பர். காரணம், விஜய் படத்திற்கு இவர் அமைத்திருக்கும் மெட்டுகள் யாவும் பெரிய ஹிட் அடித்திருக்கின்றன. கத்தி, மாஸ்டர், பீஸ்ட், லியோ உள்ளிட்ட விஜய் படங்களுக்கு இசையமைத்த இவர், தற்போது தளபதி 69 படத்திற்கும் இசையமைக்க இருக்கிறார். 

மேலும் படிக்க | விஜய்யுடன் 24 வருடம் கழித்து நடிக்கும் 48 வயது பிரபல நடிகை!! யார் தெரியுமா?

மலையாள நடிகர்!

தளபதி 69 படத்தில் விஜய்யுடன் ஒரு மலையாள நடிகரும் சேர்ந்து நடிப்பதாக கூறப்படுகிறது. ஜில்லா படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்த மோகன்லால்தான் அந்த நடிகர். இவரும், தளபதி 69 படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக நடிக்க இருக்கிறாராம்.

பிரேமலு நாயகி..

சமீபத்தில் வெளியாகி, பெரும் ஹிட் அடித்த மலையாள படம் பிரேமலு. இந்த படத்தில் ரீனு எனும் கதாப்பாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் பலரது மனங்களில் இடம் பிடித்தவர், மமிதா பைஜூ. இவரும், தளபதி 69 படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் ரெபல் படத்தில் நடித்திருக்கிறார். 

Thalapthy 69

நாயகி யார்? 

விஜய்யுடன் ஏற்கனவே 3 படங்களில் ஜோடியாக நடித்தவர், சமந்தா. இவர்தான், தளபதி 69 படத்திலும் அவருக்கு ஜோடி என்று கூறப்படுகிறது. கத்தி, தெறி, மெர்சல் என இரு படங்களில் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்திருக்கின்றனர். இவர்களின் ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்டிரியும் ரசிகர்களுக்கு பிடித்தது போல இருந்தது. அதுவே, தளபதி 69 படத்திலும் இதுவே நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கதை என்ன? 

தளபதி 69 படம், 200% விஜய்யின் படமாகதான் இருக்கும் என, அப்படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் முன்னரே தெரிவித்திருந்தார். இந்த படம், பக்கா கமர்ஷியல் கதையாக இருக்கும் எனவும், காதல்-ட்ராமா-அரசியல் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. 

மேலும் படிக்க | Thalapathy 69 : தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி கன்ஃபார்ம் ‘இவர்தான்’! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News