ஒரு வழியாக வெளியானது தளபதி 69 அதிகாரப்பூர்வ அறிவிப்பு! என்ன அப்டேட் தெரியுமா?

Thalapathy 69 Official Update : விஜய் நடிக்கும் கடைசி படத்தின் அப்டேட், தற்போது வெளியாகி இருக்கிறது. படக்குழு குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம்.  

Written by - Yuvashree | Last Updated : Sep 13, 2024, 05:27 PM IST
  • விஜய்யின் கடைசி படம்!
  • தளபதி 69 அப்டேட்..
  • என்ன தெரியுமா?
ஒரு வழியாக வெளியானது தளபதி 69 அதிகாரப்பூர்வ அறிவிப்பு! என்ன அப்டேட் தெரியுமா? title=

Thalapathy 69 Official Update : தமிழ் திரையுலகின் நம்பர் 1 நடிகராக வலம் வரும் விஜய், தீவிரமாக அரசியல் பணிகளில் ஈடுபட இருப்பதால், கடைசியாக தனது 69வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. 

தளபதி 69:

தளபதி 69 படத்தை, ஹெச்.வினோத் இயக்குகிறார் என்ற தகவல் அரசல் புரசலாக அவ்வப்போது வெளிவந்த வண்ணம் இருந்தது. இது குறித்த அதிகாரப்பூர்வமாக சில நாட்களுக்கு முன்னர் ஹெச்.வினோத் ஒரு நிகழ்ச்சியில் பேசியிருந்தார். இவர் இது குறித்து பேசுவதற்கு முன்னர், இடையில் பலர் படம் டிராப்பாகி விடும் என்றெல்லாம் கூறி பயமுறுத்தினர். இந்த நிலையில்தான், தளபதி 69 படத்தை  தயாரிக்கும் கே.வி.என் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. 

இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கும் கே.வி.என் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இதுவரை வேறு தென்னிந்திய மொழி படங்களையே தயாரித்துவ் வெளியிட்டு வந்தது. இந்த நிலையில், முதன் முறையாக தமிழ் படத்தை தயாரிக்க இருக்கிறது. நாளை 5 மணிக்கு அப்டேட் வெளியாக இருக்கிறது என்ற அப்டேட்டிற்காக, இன்று ஒரு அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது கே.வி.என் ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்.

என்ன அப்டேட்டாக இருக்கும்?

தளபதி 69 படத்தின் டைட்டில் என்ன என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதனால், படத்தின் டைட்டில் அறிவிப்பு அல்லது படத்தில் இடம் பெற்றிருப்பவர்கள் குறித்த விவரம் நாளை வெளியாகும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியாகும் படங்களில் யார் யார் நடிக்கின்றனர் என்பது குறித்த போஸ்டர்களை தயாரிப்பு நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அது போன்று இதற்கும் வெளியாகலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.  

மேலும் படிக்க | விஜய்யுடன் 24 வருடம் கழித்து நடிக்கும் 48 வயது பிரபல நடிகை!! யார் தெரியுமா?

தளபதியின் கடைசி படம்! கதறும் ரசிகர்கள்..

நடிகர் விஜய், கிட்டத்தட்ட 30 வருடங்களாக தமிழ் திரையுலக ரசிகர்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் தனது படங்கள் மூலம் மகிழ்வித்து வந்தார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் ‘தமிழக வெற்றிக்கழகம்’ அரசியல் கட்சியை தொடங்கிய கையுடன், விரைவில் முழு நேரமாக அரசியலில் இறங்குவதால், தான் கமிட் ஆகியிருக்கும் படத்தில் நடித்து முடித்தவுடன் திரையுலகை விட்டு விலகுவதாக தெரிவித்தார். இது, அவரது ரசிகர்களை ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.

தற்போது தளபதி 69 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில், ரசிகர்கள் அந்த பதிவின் கமெண்ட் செக்‌ஷனில், மிகவும் உணர்ச்சி பூர்வமாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலர், இப்படம் வெளியான பின்னர் தியேட்டருக்கு சென்று பார்க்கையில் கண்டிப்பாக அழுதுவிட்டுதான் வருவேன் என்றும் கண்ணீர் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். ஒரு சில பிரபலங்கள், இது போன்ற ஒரு முடிவை எடுப்பதற்கு பெரிய மன தைரியம் வேண்டும் என்றும், அரசியலுக்கு வந்த பின்னர், விஜய் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் கூறி, வாழ்த்து தெரிவித்தனர். 

மேலும் படிக்க | தளபதி 69 படத்தில் விஜய்யுடன் நடிப்பவர்கள் யார்? கதை என்ன? முழு விவரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News