பிக்பாஸ் 8: போட்டியாளராக களமிறங்கும் சீரியல் நடிகை.. கன்டென்ட் கட்டாயம் பிச்சிக்கும்

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப் போகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிகை ஒருவரும் போட்டியாளராக கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 8, 2024, 01:17 PM IST
  • நடிகை அக்ஷிதாவும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
  • ஜோயா கலந்துக் கொள்ளப் போவதாக கூறப்படுகிறது.
பிக்பாஸ் 8: போட்டியாளராக களமிறங்கும் சீரியல் நடிகை.. கன்டென்ட் கட்டாயம் பிச்சிக்கும் title=

Bigg Boss 8 Tamil Contestants: விஜய் சேதுபதி தொகுத்து வழங்கப் போகும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் நடிகை ஒருவரும் போட்டியாளராக கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் 8:
சுமார் 7 சீசன்களை தமிழ் மொழியில் கடந்திருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது, 8வது சீசனை எட்டியிருக்கிறது. கடந்த 7 சீசன்களில் ஒரு சில சீசன்கள் பெரிய ஹிட்டை அடித்திருக்கின்றன. ஒரு சீசன்கள் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறாமல் இருந்திருக்கிறது. 

புதிய பிக்பாஸ் தொகுப்பாளர்:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதிய தொகுப்பாளராக இணைந்திருப்பவர், நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் திரையுலகில், துணை கதாப்பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து, இன்று பாலிவுட்டிலும், தென்னிந்திய அளவிலும் பெரிய நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார். இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளர் என்ற அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. 

மேலும் படிக்க | விஜய் முதல் சிவகார்த்திகேயன் வரை.. தி கோட் படக்குழுவினர் சம்பளம் எவ்வளவு?

சம்பளம் எவ்வளவு:
நடிகர் விஜய் சேதுபதி, பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு அவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதில்,அவருக்கு சுமார் ரூ.50 காேடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஒரு எபிசோடுக்கு சுமார் ரூ.1 கோடி சம்பளமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. 

போட்டியாளர்களின் விவரம்:
இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதன்படி இந்த நிகழ்ச்சியில் பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம் நடிகர் அருண் கலந்துக் கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. அவரை தொடர்ந்து டிடிஎஃப் வாசன், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த ஜோயா கலந்துக் கொள்ளப் போவதாக கூறப்படுகிறது. அதுபோல இந்த நிகழ்ச்சியில் நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்திபன், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜன் ஆகியோர் கலந்து கொள்வதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இவர்களை தொடர்ந்து சீரியல் நடிகை பவித்ரா ஜனனி மற்றும் வினோத் பாபுவும் குறிப்பிடுகிறது. இந்த வரிசையில் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கேரக்டரில் தற்போது நடித்து வரும் நடிகை அக்ஷிதாவும் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

நடுநிலையாக இருப்பாரா விஜய் சேதுபதி?
இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கமல்ஹாசன், முதல் சீசனில் இருந்து 6வது சீசன் வரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் நல்ல பெயரையே எடுத்து வந்தார். ஆனால், கடந்த சீசனில் கமல்ஹாசன் செய்த, பேசிய சில விஷயங்கள் ட்ரோல் ஆக ஆரம்பித்தது. அதிலும் குறிப்பாக முக்கிய பாேட்டியாளராக இருந்த மாயாவையும் கமல்ஹாசனையும் சேர்த்து வைத்து பேச ஆரம்பித்தனர். இந்த ட்ரோல்ஸ்களுக்கெல்லாம் அசராத ஆள், கமல்ஹாசன் என்றாலும், அவர் ஏஐ குறித்த படிப்பு படிக்க போவதாலும், பட ஷூட்டிங்கினாலும் பிக்பாஸில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. 

கமலிடம் பலருக்கு பிடித்த விஷயம், அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாள்கள் இடையில் நடுநிலையாக இருந்தார் என்பதுதான். இதே போல, விஜய் சேதுபதியும் இருப்பாரா? என ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்வி எழுந்திருக்கிறது. இதற்கு முன்னர், விஜய் சேதுபதியும் ஒர சமையல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார். அந்த ஷோ பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை என்றாலும், விஜய் சேதுபதி தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை திறம்பட செய்தார். இதனால், இவர் மீது ரசிகர்களுக்கு அதிக நம்பிக்கை இருக்கிறது.

மேலும் படிக்க | பாலிவுட் படங்களின் நடிக்க விருப்பம் இல்லை: நடிகர் டொவினோ தாமஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News