தி கோட் படத்தின் மிகப் பெரிய சஸ்பென்ஸை உடைத்த பிரபலம்

Actor Sivakarthikeyan and Trisha In The GOAT Movie : தி கோட் திரைப்படம் விரைவில் வெளியாவதை தொடர்ந்து, இப்படத்தில் இரண்டு முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 4, 2024, 01:05 PM IST
  • இரண்டு முக்கிய பிரபலங்கள் தி கோட் படத்தில் நடித்துள்ளனர்.
  • உலகம் முழுவதும் நாளை தி கோட் திரைப்படம் வெளியாகவிருக்கிறது.
  • விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரியும் நடித்திருக்கின்றனர்.
தி கோட் படத்தின் மிகப் பெரிய சஸ்பென்ஸை உடைத்த பிரபலம் title=

Actor Sivakarthikeyan and Trisha In The GOAT Movie : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் படம், தி கோட் (The Greatest Of All Time). இந்த படத்தில் பல ஸ்பெஷலான விஷயங்கள் இடம் பெற்றிருக்கிறது. அதன்படி தற்போது இப்படத்தில் இரண்டு முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளதாக தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தி கோட் திரைப்படம்:
உலகம் முழுவதும் நாளை தி கோட் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இதனிடையே இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. சினிமாவை விட்டு விலகி, முழு நேரமாக அரசியலில் களமிறங்க இருக்கும் நடிகர் விஜய்க்கு, தி கோட் (The Goat) படம் கடைசி சில படங்களுள் ஒன்றாக அமைந்திருக்கிறது. இந்த படத்தில் விஜய், தந்தை-மகன் என இரண்டு கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார். இதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக சினேகாவும் இன்னொரு விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரியும் நடித்திருக்கின்றனர்.

மேலும் படிக்க | Ajith Kumar Trisha Son In Good Bad Ugly Movie :  குட் பேட் அக்லி படத்தில் அஜித்தின் மகனாக நடிக்கும் இளம் நடிகர்!! யார் தெரியுமா?

லைலா, ஜெயராம், பிரசாந்த், பிரபு தேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தில் பலரும் எதிர்பாராத சர்ப்ரைஸ்கள் பல காத்துக்கொண்டுள்ளன. அவற்றை படக்குழுவினர் வரிசையாக கூறினாலும், தியேட்டரில் பார்க்கும் போது வித்தியாசமாக இருக்கும் என்று பலர் கூறி வருகின்றனர். 

தி கோட் படத்தில் சிவகார்த்திகேயன் - திரிஷா:
இந்நிலையில் தி கோட் திரைப்படத்தில், பல்வேறு நட்சத்திரங்கள் கேமியோ கதாப்பாத்திரங்களில் வருவதாக அரசல் புரசலாக தகவல்கள் அண்மையில் வெளியானது. இந்த நிலையில், தற்போது இந்த படத்தில் உறுதியாக நடிகர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) மற்றும் நடிகை திரிஷா (Trisha) கூறப்படுகிறது. அதன் படி படத்தின் ப்ரோமோஷனுக்காக யூடியூப் சேனல்களுக்கு பேட்டி கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு சிவகார்த்திகேயன் படத்தில் இருக்கிறாரா என்கிற கேள்விக்கு இருக்கலாம்..இல்லாமலும் இருக்கலாம் என பதில் அளித்தார். இதன் மூலம் சிவகார்த்திகேயன் படத்தில் இருக்கலாம் என்று தெரிகிறது.

தி கோட் படத்தில் விஜயகாந்த் கேமியோ:
மறுபுறம் மறைந்த நடிகரும் தேமுதிக அரசியல் கட்சியின் தலைவருமான விஜயகாந்த் (Vijaykanth) இந்த படத்தில் ஏஐ மூலம் கேமியோ கதாப்பாத்திரத்தில் தோன்றயுள்ளதாக கூறப்படுகிறது.

அட்வான்ஸ் புக்கிங்கில் 100 கோடி:
இதனிடையே நாளை செப்டம்பர் 5ம் தேதி கோட் படம் வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் அனைத்து இடங்களுக்கும் சென்று படத்தை புரொமோட் செய்து வருகின்றனர். மேலும் தி கோட் திரைப்படம் அட்வான்ஸ் புக்கிங்கில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் இதுவரை அட்வான்ஸ் புக்கிங்கில் மட்டுமே ரூ. 45 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது, நாளைக்குள் அட்வான்ஸ் புக்கிங்கிலேயே ரூ. 100 கோடியை படம் தாண்டும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | Latest News Bigg Boss 8 Tamil Contestant : பிக்பாஸ் சீசன் 8-ல் போட்டியாளராக சிவகார்த்திகேயனின் நண்பர்!! யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News