Dhanush : 40 வயதில் நடிகர் தனுஷிற்கு 2வது திருமணம்!? மணப்பெண் ‘இப்படி’ இருப்பாராம்..

Actor Dhanush Second Marriage : தமிழ் திரையுலகில் டாப் நடிகர்களுள் ஒருவராக இருப்பவர், நடிகர் தனுஷ். இவர், இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.   

Written by - Yuvashree | Last Updated : May 25, 2024, 11:26 AM IST
  • 2022ஆம் ஆண்டு ஐஸ்வர்யாவை பிரிந்தார் தனுஷ்
  • 2வது திருமணம் செய்ய உள்ளதாக தகவல்
  • கஸ்தூரி ராஜ பெண் பார்க்கிறாராம்!
Dhanush : 40 வயதில் நடிகர் தனுஷிற்கு 2வது திருமணம்!? மணப்பெண் ‘இப்படி’ இருப்பாராம்.. title=

Actor Dhanush Second Marriage : கோலிவுட் திரையுலகில் இருக்கும் முதல் வரிசை கதாநாயகர்களுள், முக்கியமான இடத்தை பெற்றிருப்பவர் நடிகர் தனுஷ். சினிமா குடும்பத்தை சேர்ந்த இவர், தமிழ் திரையுலகில் 24 ஆண்டுகளுக்கு முன்னர் தடம் பதித்தார். இவரது தந்தை கஸ்தூரி ராஜா, ‘துள்ளுவதாே இளமை’ படத்தில் இவரை அறிமுகப்படுத்த, அடுத்து தனது அண்ணன் இயக்கிய காதல் கொண்டேன் படத்தில் சைக்கோ கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் பெரிய ஹிட் அடிக்க, தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் தனுஷ். 

திருமணமும் விவாகரத்தும்..

நடிகர் தனுஷ், திரையுலகில் தலைத்தூக்குவதற்கு முன்பாகவே குடும்ப தலைவராக மாறிவிட்டார். இவரது காதல் கொண்டேன் படத்தின் செலிப்ரிட்டி ஷோ பார்க்க வந்த ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவிற்கு, தனுஷை பிடித்து போக அப்படியே தங்கள் நட்பை தொலை பேசிகள் மூலமாகவும், நேரில் சந்தித்தும் வளர்க்க ஆரம்பித்தனர். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாற, இந்த விஷயம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. உடனே, இருவருக்கும் சுற்றமும் நட்பும் சூழ, 2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடைப்பெற்றது. அப்போது நடிகர் தனுஷிற்கு வயது 21, ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு வயது 22. 

மிக இளம் வயதிலேயே காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் இருக்கின்றனர். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கை, சில ஆண்டுகளுக்கு முன்பு பிளவுபட தொடங்கியது. ஐஸ்வர்யாவும் தனுஷும் பிரிந்து வாழ முடிவு செயதிருப்பதாக கூறி கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தங்களின் சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தனர். இதை பார்த்து முதலில் ஷாக்கான ரசிகர்கள், பிறகு “பொறுமையா சேந்துப்பாங்க..” என்று நம்பினர். ஆனால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி, குடும்ப நல நீதிமன்றத்தை நாடினர். இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவது மட்டுமன்றி, தங்களின் பிள்ளைகளை Co-parenting முறையில் வளர்த்தும் வருகின்றனர். 

மேலும் படிக்க | ஐஸ்வர்யா-தனுஷ் பிரிவுக்கு ‘இவர்’தான் காரணமா! ரசிகர்கள் அதிர்ச்சி..

இரண்டாவது திருமணம்? 

18 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு, தனுஷ்-ஐஸ்வர்யா ஆகிய இருவருமே தங்களின் திரை வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகின்றனர். தனுஷ் ஒருபுறம் தொடர்ந்து படங்களில் வரிசையாக கமிட் ஆகி நடித்துக்கொண்டிருக்க, ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தன் படத்திற்கான வேலைகளை தொடங்கினார். இந்த நிலையில்தான், தற்போது நடிகர் தனுஷிற்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளதாக திரை வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. 

மகனுக்குகாக தந்தை எடுத்த முடிவு..

40 வயது நிரம்பிய நடிகர் தனுஷிற்கு அவரது தந்தை கஸ்தூரி ராஜா, த இரண்டாவது திருமணம் செய்து வைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகர் தனுஷுடன் அவர் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை, பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தனது சமீபத்திய நேர்காணலில் தெரிவித்திருக்கிறார். 

பெண் இப்படிப்பட்டவர்தான்..

முதல் திருமணத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா ஆகிய இருவருமே திரைத்துறையை சேர்ந்தவர்கள் என்பதால் பல பிரச்சனைகள் எழுந்ததாகவும், இது அவர்களின் பிரிவுக்கு ஒரு காரணமாக அமைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், அடுத்து பார்க்கவிருக்கும் மணமகள் நிச்சயமாக திரைத்துறையை சேர்ந்தவராக இருக்க மாட்டார் என கூறப்படுகிறது. இது குறித்து நடிகர் தனுஷோ அல்லது அவரது தந்தை கஸ்தூரி ராஜாவோ இன்னும் எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. தனுஷின் அண்ணன் செல்வராகவனும் இரண்டு முறை திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | தொடர்ச்சியாக விவாகரத்து வாங்கும் தனுஷின் நண்பர்கள்! முழு லிஸ்ட் இதோ..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News