Tribute To Melody Queen Lata Mangeskar: பாரத ரத்னா பத்ம பூஷன் பத்ம விபூஷன் என பல விருதுகளை அலங்கரித்து 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் பாடியுள்ள லதா மஞ்கேஷ்கர் என்றென்றும் இசையிலகில் நீங்கா இடம் பிடித்த இசைக்குயில். இந்தியாவின் தலைசிறந்த பாடகி லதா மங்கேஷ்கரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று. குரலால் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்த கானக்குயிலின் கானம் நின்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. தன் குரலால் அனைவரது மனதையும் வென்ற லதா மங்கேஷ்கரின் குரல் என்றென்றும் மௌனமான தினம் இன்று.
கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை ஆண்ட ’லதா தீதீ’ என்றென்றும் அனைவரின் மனதிலும் இசைத்தென்றாக சாமரம் வீசிக் கொண்டிருப்பார். கானக்குயில் லதா மங்கேஷ்கர், மில்லியன்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்ற இன்னிசைக் குரல் அரசி.
“கிதி ஹசால்” என்ற மராத்தி பாடலுடன் தனது திரையுலக இசைப் பயணத்தைத் தொடங்கிய லதா மங்கேஷ்கரின் சகோதரி ஆஷா போஸ்லேயும் பிரபல பாடகி தான். “மஜ்பூர்” என்ற இந்தித் திரைப்படத்தில் லதா மங்கேஷ்கர் பாடிய பாடல் அவரது இசை வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | மீண்டும் தொடங்கும் குஷி படப்பிடிப்பு! சமந்தா வருவாரா?
இந்தியைத் தொடர்ந்து பல மொழிகளில் பாடிய ஆஷா ஜி, 1953ஆம் ஆண்டு மொழிமாற்று திரைப்படத்தில் ‘இழந்தேன் உன்னை அன்பே’, ‘நகரு நகரு’, ‘பாடு சிங்கார பாடலை’, ‘இன்று எந்தன் நெஞ்சில்’ ஆகியப் பாடல்களுடன் தமிழ் திரையுலகளில் காலடித்தடம் பதித்தார். அதன்பிறகு 1987-ம் ஆண்டில் ‘ஆராரோ ஆராரோ’ என்ற பாடலைப் பாடி, தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு தாயாக இடம் பிடித்தார் லதா. லதா மங்கேஷ்கர் நேரடியாகப் பாடிய முதல் தமிழ் பட பாடல் என்பதும், இசைஞானியின் இசையில் உருவானது இந்தப் பாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு இளையராஜா இசையில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான, ‘சத்யா’ படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘வளையோசை’ பாடலை, பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து பாடினார்.
அதனைத்தொடர்ந்து லதா மங்கேஷ்கர் பாடிய பாடல்கள் அனைத்தும் இளையராஜாவின் இசையில் உருவான தேவகானங்கள் தான். ‘என் ஜீவன் பாடுது’ என்ற படத்தில் ‘எங்கிருந்தோ அழைக்கும்’ என்ற பாடலை, பாடகர் மனோவுடன் இணைந்து டூயட்டாகவும், சோலோவாகவும் பாடினார் லதாஜி.
மேலும் படிக்க | 18 ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஒரே நாளில் ரஜினி-கமல் படங்கள்?
லதா மங்கேஷ்கர் அவர்கள், தமிழில் பாடியவை சில பாடல்கள் என்றாலும்‘ரங் தே பசந்தி’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், அவருடனே இணைந்து ‘லூகா சூப்பி’ என்ற பாடலை பாடிருக்கிறார். அதேபோல, ஹரிஹரன், உதித் நாராயணன், எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ரஹ்மான் என பலருடன் இணைந்து இந்தியில் பல பாடல்களைப் பாடியுள்ளார் லதா மங்கேஷ்கர்.
விருதுகள்
“இசைக் குயில்” என அன்போடு அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர் வாங்காத விருதுகளே இல்லை என்று சொல்லலாம். எண்ணிலடடங்கா விருதுகளின் நாயகி பெற்ற விருதுகளின் நீளமான பட்டியலில் சில...
இந்தியாவின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா விருது”, “பத்ம பூஷன் விருது”, “பத்ம விபூஷன்” விருதுகளைப் பெற்றது மட்டுமல்லாமல், தேசிய விருது, தாதாசாகேப் பால்கே விருது என உயரிய விருதுகளை பெற்றுள்ளார் லதா மங்கேஷ்கர்., நான்கு முறைக்கு மேல் ஃபிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ள லதா மங்கேஷ்வர் அவர்கள், நான்கு வயதிலேயெ படத்தொடங்கி, கிட்டத்தட்ட 65 ஆண்டுகள், சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்த சரித்திர நாயகியாக இசை வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துள்ளார். சரித்திர நாயகிக்கு தலை வணங்கி வாழ்த்தி கூறி நினைவாஞ்சலி செலுத்துகிறோம்.
மேலும் படிக்க | இயக்குநர் கஜேந்திரன் மறைவு: துக்க வீட்டிலும் நகைச்சுவை செய்த கவுண்டமணி...
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ