விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிக்கும் 'குஷி' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்

நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளையொட்டி, குஷி படக்குழு அவரது ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது. இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 9, 2023, 04:09 PM IST
  • விஜய் தேவரகொண்டாவிற்கு பிறந்தநாள் பரிசு.
  • சமந்தாவின் 'குஷி' பட வீடியோ இணையத்தில் வைரல்.
  • 'குஷி' திரைப்படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு.
விஜய் தேவரகொண்டா-சமந்தா நடிக்கும் 'குஷி' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் title=

தெலுங்கில் முன்னணி நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ' குஷி' படத்தில் இடம்பெற்ற 'என் ரோஜா நீயா..' என தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் வழங்கும் 'குஷி' திரைப்படத்திலிருந்து வெளியாகியிருக்கும் முதல் பாடலுக்கு 'என் ரோஜா நீயா..' என பெயரிடப்பட்டிருக்கிறது.

'என் ரோஜா நீயா ..' எனும் பாடலின் மெட்டிற்கும், பாடல் வரிகளுக்கும் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ரூத் பிரபு திரையில் தோன்றி காதல் உணர்வை துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். பாடலாசிரியர் மதன் கார்க்கி எழுதிய பாடல் வரிகளில் கதையின் நாயகனான விஜய் தேவரகொண்டா, காதல் மீது கொண்ட பேரார்வத்தின் காரணமாக காதலை விவரிக்கிறார். காஷ்மீரின் பசுமையான நிலவியல் பின்னணியுடன் தொடங்கும் இந்த பாடலுக்கான காணொளியில் நடிகர் விஜய் தேவரகொண்டா பொருத்தமான காதலராகவும், சமந்தா ரூத் பிரபு அவருக்கு ஏற்ற அழகிய காதலியாகவும் தோன்றுகிறார்கள்.

மேலும் படிக்க | Manobala: “பாட்டு பாடனுமா..மறந்து போச்சே?” மனோபாலாவின் கடைசி தருணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ!

ஹேஷாமின் இசையமைப்பும், அவரது சொந்தக் குரலும் பாடலின் ஜீவனுடன் ஒன்றிணைந்திருக்கின்றன. அவர் இனிமையான மற்றும் புதுமையான பாடலை உருவாக்கியுள்ளார். இந்தப் பாடல் தரமான இசையை கேட்பவருக்கு நிச்சயம் பிடிக்கும்.

இயக்குநர் சிவா நிர்வாணா மணிரத்னத்தின் ரசிகர் என்பதால், இந்த பாடலில் இடம்பெற்ற சில காட்சிகள், மணிரத்னம் படத்தின் அதிர்வை பிரதிபலிக்கின்றன. இந்தப் பாடலுக்கு சிவா நிர்வாணா நடனமும் அமைத்திருக்கிறார்.

'குஷி' திரைப்படம் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ரூத் பிரபு நடித்திருக்கும் காதல் கதை. இந்த திரைப்படத்தில் இடம் பிடித்திருக்கும் பாடலை முதல் பாடலாக வெளியிட்டு, ரசிகர்களிடத்தில் கவனத்தை கவர்ந்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிதி பங்களிப்புடன் சிவா நிர்வாணா இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'குஷி' திரைப்படம் செப்டம்பர் 1 ஆம் தேதியன்று வெளியாகிறது. இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா ரூத் பிரபு, ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, ரோகிணி, வெண்ணலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. முரளி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹேப் இசையமைத்திருக்கிறார்.

முன்னணி நட்சத்திர நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்த நாளான இன்று அவரது நடிப்பில் தயாராகி, விரைவில் வெளியாக இருக்கும் 'குஷி' படத்திலிருந்து முதல் பாடல் வெளியிடப்பட்டிருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். 

காஷ்மீர் பின்னணியில் அழகான காதல் கதையாக இப்படம் திரையிடப்படுகிறது. இந்த படத்தின் புதிய ஷெட்யூல் இன்று முதல் கொச்சியில் தொடங்கியுள்ளது. இந்த ஷெட்யூலில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா மீது முக்கிய காட்சிகளை படமாக்கவுள்ளார். இந்த ஷெட்யூலுடன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த படம் இந்திய அளவில் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் பிற மொழிகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | மதிய வேளையில் மாஸ் காட்ட வந்த சீரியல், ஆரம்பமே களைகட்டிய சண்டக்கோழி - முதல் எபிசோடில் நடந்தது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News