அதிக சம்பளம் கேட்டாரா கீர்த்தி சுரேஷ்?

கீர்த்தி சுரேஷ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை. தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 24, 2021, 05:33 PM IST
அதிக சம்பளம் கேட்டாரா கீர்த்தி சுரேஷ்? title=

கீர்த்தி சுரேஷ் ஓர் இந்தியத் திரைப்பட நடிகை. தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.  2000-களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013-ம் ஆண்டில் 'கீதாஞ்சலி' எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபுவுடன் ஜோடியாக 'இது என்ன மாயம்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ALSO READ அமேசான் பிரைமில் இருந்து நீக்கப்படும் விஜய் மற்றும் ரஜினியின் படங்கள்!

இவருக்கு 2018-ம் ஆண்டில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது 'மகாநதி' என்ற தெலுங்கு திரைப்படத்தில் பழம்பெரும் நடிகையான சாவித்திரியின் கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்தததற்காக வழங்கப்பட்டது.  இவர் தமிழில் தொடரி,பைரவா, ரெமோ, தானா சேர்ந்த கூட்டம்,சர்கார் போன்ற படங்களில் நடித்து தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஜொலித்து வருக்கிறது.

keerthy

தற்போது சூப்பர் ஸ்டாருடன் 'அண்ணாத்தே' படத்தில் நடித்துள்ளார்.இப்படம் தீபாவளி ரிலீசுக்காக காத்திருக்கிறது.தெலுங்கில் இவரது கைவசத்தில் சில படங்கள் உள்ளன.தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார்.  மேலும் நானியுடன் 'தசரா' என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் கேட்கப்பட்டது.ஆனால்அந்த படத்தில் நடிக்க ஆரம்பத்தில் கீர்த்தி சுரேஷ் அதிக சம்பளம் கேட்டு, பின்னர் ஒருவழியாக ரூ.3 கோடிக்கு சம்மதம் தெரிவித்ததாக திரை வட்டாரத்திலிருந்து தகவல்கள் தெரிவிக்கள்பட்டுள்ளது. 

இதுவரை நடித்த படங்களில் கீர்த்தி சுரேஷ் ரூ.2 கோடியில் இருந்து ரூ.2.5 கோடி வரை சம்பளம் வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் 3 திரைப்படங்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News