கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ படம்தான் கோலிவுட்டின் தற்போதைய ‘டாக் ஆஃப் தி டவுன்’ ஆக உள்ளது.
விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்துக்குப் பின்னர் லோகேஷ் இயக்கியுள்ள இப்படத்தை கமல்ஹாசன் உள்ளிட்டோர் தயாரித்துள்ளனர். அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. வருகிற ஜூன் 3ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் புரோமோசன் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில் இப்படத்துக்காக தனி ‘எமோஜி’ ஒன்றை வடிவமைத்துள்ளனர். வெளியில் கறுப்பு நிறமும் உள்ளே நீல நிறமும்கூடிய ஆடையுடன் கமலின் அரை உருவம் எமோஜியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் எமோஜியைப் பொறுத்தவரை இந்த ட்ரெண்டிங்கைத் தமிழில் முதன்முதலாகத் தொடங்கிவைத்தவர் விஜய்தான், அட்லி இயக்கத்தில் அவர் நடித்த ‘மெர்சல்’ படத்துக்குத்தான் முதன்முதலாக இவ்வகை எமோஜிகள் வந்தன.
மேலும் படிக்க| ‘விக்ரம்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல்- படம் வெளியாகுமா?!
Our labour of love . Now you emote . #Vikram #VikramInAction #VikramHitlist
— Kamal Haasan (@ikamalhaasan) May 23, 2022
அதன் பின், பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘காலா’முதல் அண்மையில் வந்த விஜய்யின் ‘பீஸ்ட்’ வரை பல படங்களுக்கு எமோஜிக்கள் உருவாக்கப்பட்டன. அந்த வகையில், கமலின் ‘விக்ரம்’ படம் இவ்வகை எமோஜியைப் பெறும் 11ஆவது தமிழ்ப்படமாம்.
ஏற்கெனவெ ரயில் பெட்டிகளில் விக்ரம் போஸ்டர் ஒட்டப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது புதிதாக ட்விட்டர் எமோஜி வந்துள்ளதால் ரசிகர்கள் அதனை வைரல் ஆக்கிவருகின்றனர்.
மேலும் படிக்க | கெளதம் மேனன் பட நாயகியாகும் இயக்குநர் ஷங்கரின் மகள்?- அதுவும் இப்படியான ரோலா?!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR