நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் தமிழ்நாட்டை தாண்டி உலகளவில் வசூலை வாரிக்குவித்து வருகிறது. இந்த படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆதரவு கொடுத்துள்ளதை தொடர்ந்து படம் வெற்றிநடை போட்டு வருகிறது.
வெறித்தனம் காட்டிய ரஜினி!
கடந்த 5 ஆண்டுகளில் ரஜினிகாந்த் நடித்து வந்த படங்களில் அவரது மாஸ்-க்ளாஸ் தனத்தை பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் புலம்பி வந்தனர். 2.0, பேட்ட, தர்பார், காலா பாேன்ற படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியதே தவிர அவர்களுக்கு அது எப்போதும் கொடுக்கும் ‘ரஜினியிசத்தை’ கொடுக்கவில்லை. ஆனாலும், அப்படங்களில் சில வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினை பெற்றன. தற்போது ரஜினிகாந்தை வைத்து நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் படம், ரசிகர்கள் எதிர்பார்பை பூர்த்தி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், படத்திற்கு ரிபீட் ஆடியன்ஸ் வந்த வண்ணம் உள்ளனர். பழைய வெறித்தனமான ரஜினியை இந்த படம் மூலமாகத்தான் மீண்டும் பார்க்க முடிந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | ரூ.400 கோடி வசூலை தாண்டிய ஜெயிலர்.. அதுவும் 6 நாளில்
பாக்ஸ் ஆபிஸ் கலக்ஷன்:
ஜெயிலர் திரைப்படம், கடந்த 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. படத்தின் முதல் நாள் வசூலே 45 கோடிக்கும் மேல் எகிறியது. பட ரிலீஸிற்கு அடுத்த இரண்டு நாட்கள் விடுமுறை நாள் என்பதாலும், நேற்று (ஆகஸ்டு 15) விடுமுறை என்பதாலும் திரையரங்கிற்கு ரசிகர்கள் குடும்பம் குடும்பமாக வந்த வண்ணம் இருந்தனர். இதையடுத்து, படத்தின் வசூலும் உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 6 நாட்களில் மட்டும் ஜெயிலர் படம் 400 கோடி ரூபாய்க்கும் மேல் கலெக்ட் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினமான நேற்று மட்டும் படத்தின் வசூல் 33 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது.
5 நாட்களில் தமிழ் நாட்டில் மட்டும், ஜெயிலர் படம் 139.05 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. தெலுங்கு சினிமாவை பொருத்த வரை, படம் 32.55 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் இந்தி மொழியில் 1.25 கோடி ரூபாய் வரை கலெக்ட் செய்துள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர்.
பொன்னியின் செல்வன் படத்தை பின்னுக்கு தள்ளி…
கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பினை பெற்ற படம், பொன்னியின் செல்வன் 2. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, விக்ரம் என பாதி தமிழ் சினிமாவே நடித்திருந்தது. இந்த படம், முதல் பாகம் அளவிற்கு பெரிதாக வசூல் செய்யவில்லை என்றாலும், தொடக்கத்தில் உலகளாவிய வசூலை வாரிக்குவித்தது. கோலிவுட் படங்களிலேயே உலகளவில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பொன்னியின் செல்வன் 2 படம் தக்க வைத்திருந்தது. இதையடுத்து இந்த பட்டத்தை தற்போது ஜெயிலர் படம் தட்டித்தூக்கியுள்ளது. 5 நாட்களில் உலகளாவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமை தற்போது ஜெயிலர் படத்தை சேர்ந்துள்ளது.
விரைவில் 400 கோடியை எட்டும்..
இதுவரை வெளிவந்துள்ள ரஜினிகாந்தின் படங்களில் 2.0, கபாலி ஆகிய படங்கள் 6 நாட்களுக்குள் 400 கோடி வரை கலெக்ட் செய்தது. இதையடுத்து பொன்னியின் செல்வன் மற்றும் விக்ரம் ஆகிய படங்கள் 400 கோடி வசூலை வெளியான சில நாட்களுக்குள் எட்டின. ஜெயிலர் படமும் இந்த லிஸ்டில் விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ஒரு வழியா வெளியான அப்டேட்… அஜித்தின் விடாமுயற்சி குறித்து சூப்பர் தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ