விரைவில் முக்கிய அறிவிப்பு, நயன்தாரா - விக்னேஷ் சிவன் அதிரடி முடிவு

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனும் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 2, 2021, 02:14 PM IST
விரைவில் முக்கிய அறிவிப்பு, நயன்தாரா - விக்னேஷ் சிவன் அதிரடி முடிவு title=

தரமணி நடிகர் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ராக்கி. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கி உள்ளார். தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

ராக்கி (Rocky) படத்தின் வெளியீட்டு உரிமையை நடிகை நயன்தாரா (Nayanthara) மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் (Vignesh Shivan) ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. சமீபத்தில், இப்படத்தின் டீசர் வெளியாது. மேலும் அந்த டீசர் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய பணிகள் நடைபெற்று வந்த நிலையில், கொரோனா 2-வது அலை பரவல் தமிழகத்தில் தீவிரமடைந்து, திரையரங்குகள் மூடப்பட்டது. 

ALSO READ | நயன்தாராவின் நெற்றிக்கண்: விக்னேஷ் சிவன் அளித்த லேட்டஸ்ட் அப்டேட் இதொ!!

இந்நிலையில் தற்போது இந்த படம் ஓடிடி தளமான சோனி லைவில் வெளியாகவுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, சோனி லைவ்வில் விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி, சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள ‘வாழ்’, கார்த்திக் நரேனின் ‘நகரகாசூரன்’ உள்ளிட்டப் படங்கள் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராக்கி படத்தின் வெளியீடு குறித்து நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News