’மாநாடு’ மறுபிறவி.. ’பத்துதல’ அவதாரம்..! சிம்புவை கொண்டாடும் திரையுலகம்

அகவை 39-ல் அடியெடுத்து வைக்கும் நடிகர் சிம்பு, வாழ்த்து மழைகளில் நனைந்து வருகிறார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 3, 2022, 01:30 PM IST
  • அகவை 39-ல் அடியெடுத்து வைக்கிறார் சிம்பு
  • பிறந்தநாளையொட்டி அவருக்கு குவியும் வாழ்த்து
  • ’பத்து தல’ திரைப்படத்தில் நடிக்க உள்ளார்
’மாநாடு’ மறுபிறவி.. ’பத்துதல’ அவதாரம்..! சிம்புவை கொண்டாடும் திரையுலகம் title=

மாநாடு வெற்றிக்குப் பிறகு தமிழ் திரையுலகில் மீண்டும் நட்சதிர அந்தஸ்தில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் சிம்பு, இந்த ரீ என்டிரியை கொடுக்க கிட்டதட்ட 10 ஆண்டுகள் போராடியுள்ளார். சிம்பு என்றாலே பிரச்சனை, சிக்கல் என எண்ணத்தோன்றும் அளவுக்கு அவரைப் பற்றிய தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருந்த நிலையில், வெங்கட்பிரபு மற்றும் சுரேஷ் காமாட்சியுடன் இணைந்து ’மாநாடு’ திரைப்படம் மூலம் தனக்கென ஒரு மேடையை அமைத்துக் கொண்டுள்ளார்.

ALSO READ | கெளதம் மேனன் படத்தில் 5 வித கெட்-அப்களில் நடிக்கும் சிம்பு!

இதனால், இன்று பிறந்நாள் காணும் சிம்பு, வாழ்த்துகளால் நனைந்து கொண்டிருக்கிறார். தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நடிகராக அவதாரம் எடுத்து, நட்சத்திரமாக உயர்ந்திருப்பவர் சிம்பு மட்டுமே. நடிப்பு மட்டுமே இவருக்கு தெரிந்த வித்தை அல்ல. தந்தை டி.ராஜேந்தரைப் போலவே பாடலாசிரியர், திரைக்கதை, இயக்கம், இசை என சினிமாவின் ஆணிவேரையும் கற்றுத் தெரிந்து வைத்திருப்பவர். 

தந்தை டி.ராஜேந்தரனின் ‘உறவு காத்த கிளி’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார் சிம்பு. அதிலிருந்து தொடர்ச்சியாக 10க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அவர், ‘காதல் அழிவதில்லை’ திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். பின்னர், தம், குத்து, அலை, கோவில் உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்த சிம்பு, மன்மதன் திரைப்படம் மூலம் திரைக்கதையாசிரியராக மாறினார்.

ALSO READ | விஜயுடன் 3வது முறையாக மோதும் சிம்பு..! பீஸ்ட் VS வெந்து தணிந்தது காடு

வல்லவன் திரைப்படம் மூலம் இயக்குநராக அவதாரமெடுத்த அவர், 2010 ஆம் ஆண்டுக்குப் பிறகு தொடர்ச்சியான சிக்கல்களை எதிர்கொள்ள தொடங்கினார். வரிசையாக படங்கள் தோல்வியடைந்ததால் சில காலம் நடிப்புக்கு இடைவெளிகூட விட்டார். இதன்பிறகு தொடர்ச்சியாக நடிப்பில் கவனம் செலுத்திய அவருக்கு பெஸ்ட் கம்பேக் மூவி என்று சொல்லுமளவிற்கு எந்த படங்களும் அமையவில்லை. ’ஈஸ்வரன்’ திரைப்படம் சிம்புவுக்கு சராசரியாக அமைந்தாலும், ’மாநாடு’ கம்பேக் மூவியாக அமைந்துவிட்டது. இந்தப் படத்துக்குப் பிறகு கவுதம் வாசுதேவ் மேனனின் ’வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில் பிஸியாக இருக்கும் சிம்பு, அடுத்ததாக ’பத்து தல’ திரைப்படத்தில் நடிக்கிறார். மாநாட்டில் மறுபிறவி எடுத்த சிம்பு, ’பத்து தல’- யில் புதிய அவதாரம் எடுப்பாரா? என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News