விருமாண்டி 2-வில் அஜித் நடிக்கிறாரா? வைரலாகும் போஸ்டர்!!

வினோத் இயக்கத்தில் விருமாண்டி 2 வெளிவரவுள்ளதாகவும் அதில் அஜித் நடிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளிவருகின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 21, 2020, 11:47 AM IST
  • கமல் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
  • நினைவிருக்கலாம்.
  • போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், அஜித் நடிப்பில் விருமாண்டியின் இரண்டாம் பாகம் வரவிருப்பதாக போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.
  • ரசிகர்களின் இந்த ஆசையும் நிறைவேறினால் அது அவர்களுக்கு மற்றொரு தீபாவளியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
விருமாண்டி 2-வில் அஜித் நடிக்கிறாரா? வைரலாகும் போஸ்டர்!! title=

அஜித் ரசிகர்களுக்கு ஒரு அற்புத செய்தி!! கமல் நடிப்பில் வெளிவந்த விருமாண்டி படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது நினைவிருக்கலாம். தற்போது வினோத் இயக்கத்தில் விருமாண்டி 2 வெளிவரவுள்ளதாகவும் அதில் அஜித் நடிக்கவுள்ளார் என்றும் தகவல்கள் வெளிவருகின்றன.

போனி கபூர் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், அஜித் (Ajith) நடிப்பில் விருமாண்டியின் இரண்டாம் பாகம் (Virumandi 2) வரவிருப்பதாக போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது.

இது அஜித் ரசிகர்களிட்டையே பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

இது ரசிகர் ஒருவரால் உருவாக்கப்பட்ட ஃப்னே மேட் போஸ்டர் என்ற செய்தியும் உடனுக்குடன் வந்து விட்டாலும், போஸ்டர் அனைவரையும் கவரும் வண்ணம் உள்ளதால், இது மாஸாக ரசிகர்களுக்கிடையே வைரலாகி வருகிறது.

ALSO READ: வெங்கட் பிரபுவின் நடிப்பில் வெளியாகிறது 'லாக்கப்': OTT Release தேதி அறிவிப்பு

கூடவே, அமர்களமாய் ரசிகர்களை மயக்கும் காதல் மன்னன், ரசிகர்களுக்கு அவர் மீது இருக்கும் விசுவாசத்தை எப்போதும் நிறைவேற்றி வருகிறார். ரசிகர்களின் இந்த ஆசையும் நிறைவேறினால் அது அவர்களுக்கு மற்றொரு தீபாவளியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

2004 ஆம் ஆண்டு வெளிவந்த விருமாண்டி, கமல் எழுதி, இயக்கி. நடித்த படமாகும். இதில் கமலுடன் சேற்ந்து அபிராமி, ரோஹிணி மற்றும் பலர் நடித்திருந்தனர். பல சர்ச்சைகளுக்குப் பிறகு வெளி வந்த இந்தப் படம் மிகப் பெறும் வெற்றி பெற்றது. கமலின் திரைப்படங்களில் ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த படமாக இது இன்றும் திகழ்கிறது. 

Trending News