டிசம்பர் மாதத்தில் அடுத்தடுத்து படங்களை வெளியிடும் Disney+ Hotstar!

Disney+ Hotstar-ல் டிசம்பர் மாதம் 10-க்கும் மேற்பட்ட படங்கள் மற்றும் வெப் சீரிஸ் வெளிவர உள்ளது  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 2, 2021, 04:09 PM IST
டிசம்பர் மாதத்தில் அடுத்தடுத்து படங்களை வெளியிடும் Disney+ Hotstar! title=

2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட Disney+ Hotstar OTT, அதிக பயனாளர்களை கொண்டு சிறந்த OTT தளமாக விளங்கி வருகிறது.  இந்த டிசம்பர் மாதத்தை கொண்டாடும் வகையில் இதில் பல படங்கள் வெளியாகவுள்ளது.  அவற்றின் பட்டியல் இதோ.

டிசம்பர்-1: HAWKEYE-ன் முதல் இரண்டு எபிசோட்கள் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மூன்றாவது எபிசோட் Disney+ Hotstar தளத்தில் டிசம்பர் 1-ம் தேதி ரிலீசானது.  இது ஒரு அமெரிக்க தொலைக்காட்சி தொடராகும்.  இதனை மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்த தொடரை ஜொனாதன் இக்லா உருவாக்கியுள்ளார்.  இதில் ஜெர்மி ரென்னர், ஹெய்லி ஸ்டெய்ன்ஃபீல்ட், டோனி டால்டன் ஆகியோர் நடித்துள்ளனர்.

hawkeye

டிசம்பர்-2: DOPESICK E-5 மற்றும் ITS ALWAYS SUNNY IN PHILADELPHIA S-15 ஆகிய இரண்டு அமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் டிசமபர்-2 ம் தேதி ரிலீசாகிறது.  டேனியல் வில்லியம் ஸ்ட்ராங் என்பவர் 'DOPESICK' தொடரை உருவாக்கினார், முதல் நான்கு எபிசோடுகள் நல்ல வரவேற்பை பெற்றது.  ராப் மெக்எல்ஹென்னி என்பவர்  'IT's ALWAYS SUNNY IN PHILADELPHIA S-15' இந்த தொடரை இயக்கியுள்ளார்.

ALSO READ சிவகார்த்திகேயன் எழுத்தில் விஜய் குரலில் பீஸ்ட் முதல் சிங்கிள்!

டிசம்பர்-3:  இந்த நாளில் 'DIARY OF A WIMPHY KID', 'THE RESCUE', 'SIVAKUMARIN SABATHAM'  ஆகிய இரண்டு ஆங்கில படங்கள் மற்றும் ஒரு தமிழ் படம் என மொத்தம் மூன்று படங்கள் ரிலீசாக உள்ளது.  மேலும் டிசம்பர் 3-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை இந்தியா மாற்று நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் தொடர் போட்டியையும் Disney+ Hotstar தளத்தில் கண்டு மகிழலாம்.

டிசம்பர்-5:  சவுதி அரேபியாவின் ஜெத்தாவில் பிரம்மாண்டமாக நடைபெறும் 'FORMULA 1 STC SAUDI ARABIAN GRANDPRIX 2021' நிகழ்ச்சியை Disney+ Hotstar தளத்தில் நேரடியாக காணலாம்.

f1

டிசம்பர்-6: ஜெஸ்ஸி ஆம்ஸ்ட்ராங் என்பவரால் இயக்கப்பட்ட ஒரு டார்க் காமெடி தொடர் தான் 'SUCCESSION'.  இது சிறந்த நாடகத்துக்கான பல விருதுகளையும் பெற்றுள்ளது.  இதன் சீசன்கள் ஒவ்வொன்றும் நல்ல வரவேற்பை பெற்றது.  தற்போது இந்த தொடரின் 3-வைத்து சீஸனின் 8-வது எபிசோட் டிசம்பர்-6ம்  Disney+ Hotstar தளத்தில் வெளியாகிறது. மேலும் இதே நாளில், இதே தளத்தில் 'CURB YOUR ENTHUSIASM -11' என்கிற சீஸனின் 7-வது எபிசோட் வெளியாகிறது.

டிசம்பர்-8:  பூமியின் பல இடங்களுக்கு சென்று சாகசம் செய்யும் ஒரு மனிதனின் கதை தான் இந்த தொடர்.  இது Disney+ Hotstar தளத்தில் டிசம்பர்-8ம் தேதியன்று வெளியாகிறது.  மேலும் இதே நாளில் HAWKEYE-ன் 4-வது எபிசோடும் வெளியாகுகிறது.

டிசம்பர்-10: சுஷ்மிதா சென் நடிப்பில் வெளியான சீரிஸின் இரண்டாம் பாகம் தான் AARYA-2.  தந்து குடும்பத்தை காப்பாற்ற போராடும் ஒரு பெண்ணின் கதை தான் இது.  இதன் இரண்டாவது சீசன் Disney+ Hotstar தளத்தில் டிசம்பர்-10 ம் தேதி ரிலீசாகிறது.

டிசம்பர்-15: பல திறமை வாய்ந்த கலைஞர்களை வைத்து நடத்தப்படும் சமையல் நிகழ்ச்சி தான் இது.  இந்த நிகழ்ச்சி டிசம்பர்-15ம் தேதி  Disney+ Hotstar தளத்தில் வெளியாகிறது.

ALSO READ 2021-ல் தியேட்டரில் Blockbuster ஹிட் அடித்த 4 திரைப்படங்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News