SHOCKING : உதட்டுல முத்தம் குடுத்தாதான் நடிக்க முடியும்னு சொன்னாங்க : யாஷிகா ஆனந்த் வருத்தம்

SHOCKING : திரைத்துறையின் தனக்கு ஏற்பட்ட ஆபத்தான, அருவறுப்பான அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் யாஷிகா ஆனந்த். இயக்குநர் ஒருவர் Lip Kiss கொடுக்க சொன்னதாக வருத்தத்துடன் பகிர்ந்துள்ளார்.

Written by - அதிரா ஆனந்த் | Last Updated : Jul 7, 2022, 11:53 AM IST
  • Lip Kiss குடுக்க சொல்லி வற்புறுத்துனாங்க
  • வருத்தத்துடன் பகிர்ந்துகொண்ட யாஷிகா ஆனந்த்
SHOCKING : உதட்டுல முத்தம் குடுத்தாதான் நடிக்க முடியும்னு சொன்னாங்க : யாஷிகா ஆனந்த் வருத்தம் title=

சினிமாத்துறையில் Cast Couch என்று சொல்லப்படும் பெண்களை தவறாக பயன்படுத்தும் விதம் மிகவும் அதிகம். அதற்கு தானும் விதிவிலக்கு அல்ல என்று யாஷிகா ஆனந்த் தெரிவித்திருக்கிறார். இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் மூலம் திரைத்துறையில் நாயகியாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதற்கு முன் கவலை வேண்டாம், பாடம் உள்ளிட்ட படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதற்கு பின் மூக்குத்து அம்மன், நோட்டா உள்ளிட்ட படங்களில் யாஷிகா நடித்திருக்கிறார். ஓராண்டுக்கு முன் மிகப்பெரிய விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் பிழைத்தார் யாஷிகா. அவருடன் பயணித்த அவரது நெருங்கிய தோழி உயிரிழந்தார். பலத்த காயங்களுக்குள்ளாகி மருத்துவமனையிலேயே பல காலம் கழித்தார் யாஷிகா. தன்னுடைய துயரமான நாட்களில் இருந்து மீண்டுவந்து யாஷிகா ஆனந்த் மீண்டும் திரையில் தோன்ற ஆரம்பித்திருக்கிறார்.

மேலும் படிக்க | முதல் முதலாக வெளியான விஜய்யின் மச்சினிச்சி புகைப்படம்! இணையத்தில் வைரல்!

சமீபத்தில் யாஷிகா ஆனந்த் தனியார் நிறுவனத்திற்கு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அதில் தான் சினிமாத்துறைக்குள் நுழைந்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவங்களை பகிர்ந்துள்ளார். ஆரம்ப காலத்தில் வாய்ப்பு தேடி சென்றபோது இயக்குநர் ஒருவர், தனக்கு உதட்டில் முத்தம் கொடுத்து சமாதானம் செய்வது போல நடித்துக் காட்ட வேண்டும் என்று வலியுறுத்தியதாக யாஷிகா கூறியுள்ளார். அந்தக் காட்சியில் சிறப்பாக நடித்தால் வாய்ப்பு தருவதாகவும் கூறியிருக்கிறார். இயக்குநரின் கள்ளத் தனத்தை புரிந்து கொண்டு அடுத்த அறையில் காத்திருந்த தனது அம்மாவிடம் ஓடிப் போய்விட்டதாக யாஷிகா ஆனந்த் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். சினிமா உலகம் இப்படித்தான் இயங்குகிறது என்றும் அவர் பகிர்ந்திருக்கிறார்.

மேலும் படிக்க | இத்தனை தியேட்டர்களா?... பிரமாண்டமாக வெளியாகிறது தி லெஜண்ட் - வாய் பிளக்கும் கோலிவுட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News