’வாத்தி’ இனி தனுஷ் தான் - புதிய டைட்டில் அறிவிப்பு

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் நேரடியாக தயாராகும் நடிகர் தனுஷின் புதிய படத்திற்கு தமிழில் ’வாத்தி’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Written by - அதிரா ஆனந்த் | Edited by - S.Karthikeyan | Last Updated : Dec 23, 2021, 11:08 AM IST
’வாத்தி’ இனி தனுஷ் தான் - புதிய டைட்டில் அறிவிப்பு title=

ஹோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்து கலக்கி வந்த தனுஷ் (DHANUSH) இப்போது டோலிவுட்டிலும் கால்பதிக்க உள்ளார். இவர் அடுத்து நடிக்க உள்ள திரைப்படத்தை பல வெற்றிப் படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ராங்டே படத்தை இயக்கிய இளம் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்தப் படத்துக்கு டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று அறிவிக்கப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

ALSO READ | Movie Review: அந்த நாள் ஞாபகம்! கபில்தேவின் சாதனை! 83 திரைப்பட விமர்சனம்...

அதன்படி, தனுஷ் - வெங்கி அட்லூரி - சித்தாரா என்டர்டெயின்மென்ஸ் ஆகியோர் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்துக்கு ’வாத்தி’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழுக்கு இந்த டைட்டில், தெலுங்கில் 'SIR' என்ற டைட்டிலில் படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. படம் நேரடியாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாக்கப்படுகிறது. ஃபார்ச்சூன் ஃபோர் நிறுவனத்தைச் சேர்ந்த சாய் சௌஜன்யாவும் இந்தப் படத்தை இணைந்து தயாரிக்க உள்ளார். 

மலையாள நடிகை சம்யுக்தா மேனன், தனுஷூக்கு ஜோடியாக நடிக்கிறார். சூது கவ்வும், சேதுபதி, தெகிடி, மிஸ்டர் லோக்கல், மாறா போன்ற படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் நவின் நூலி இப்படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார் .பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறர் இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற ஜனவரி 2022 -ல் தொடங்குகிறது.

ALSO READ | கமலின் விக்ரம் ரிலீஸ் தேதி! அதிகார்வபூர்வ அறிவிப்பு!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News