வசூலை அள்ளும் தனுஷ் - ஐஸ்வர்யா இணைந்த படம் - ரசிகர்கள் உற்சாகம்

தனுஷை வைத்து ஐஸ்வர்யா இயக்கிய 3 படம் தெலுங்கில் மறு வெளியீடு செய்யப்பட்டு வசூலை குவித்துவருகிறது.

Written by - க. விக்ரம் | Last Updated : Sep 10, 2022, 04:15 PM IST
  • தனுஷை வைத்து 3 படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா
  • படம் தற்போது தெலுங்கில் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது
  • ஆந்திரா, தெலங்கானாவில் வசூலையும் அள்ளிவருகிறது
 வசூலை அள்ளும் தனுஷ் - ஐஸ்வர்யா இணைந்த படம் - ரசிகர்கள் உற்சாகம் title=

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இருவரும் பிரிந்தனர். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதற்கிடையே, தனுஷை வைத்து 3 படத்தை ஐஸ்வர்யா இயக்கினார். கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் தனுஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலை வெறி என்ற பாடல் உலக அளவில் ஹிட்டடித்தது. படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

மேலும் படிக்க | சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் இதுதானா?

இந்தச் சூழலில் 3 படத்தின் தெலுங்கு பதிப்பானது ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த 8ஆம் தேதி மறு வெளியீடு செய்யப்பட்டது. அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவிதமாக இந்த மறு வெளியீடானது அந்த மாநிங்களில் வசூலில் கலக்கிவருகிறது.

Dhanush

தனுஷ் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி என்ற படத்தில் நடித்திருக்கிறார். சித்தாரா என்டர்டெயிண்மெண்ட் தயாரித்திருக்கும் இப்படம் பைலிங்குவலாக உருவாகிவருகிறது. இதன் டீசர் தனுஷின் பிறந்தநாளன்று வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. படமும் விரைவில் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில்தான் 3 படம் மீண்டும் வெளியாகியுள்ளது. 

 

வாத்தி படத்தின் வியாபாரத்துக்கு 3 படத்தின் மறு வெளியீட்டு வெற்றி நிச்சயம் உதவும் என்கின்றனர் தெலுங்கு திரையுலகினர். மேலும், தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் மாபெரும் வெற்றி பெற்றதுபோல் வாத்தி படமும் வெற்றி பெறும். அதன் முன்னோட்டம்தான் 3 படத்தின் வெற்றி என உற்சாகமாக கூறுகின்றனர் தனுஷின் ரசிகர்கள்.

மேலும் படிக்க | தலைமுறைகள் தாண்டி என்னை ரசிக்கிறீர்கள் - கமல் ஹாசன் நெகிழ்ச்சி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News