இந்தியன் 2: பாலிவுட் நடிகையை களமிறக்கும் சங்கர்! தாயான நடிகை நீக்கம்

இந்தியன் 2 படத்தில் இருந்து அண்மையில் தாய்மை அடைந்த காஜல் அகர்வால் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பாலிவுட் நடிகையை களமிறக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம் இயக்குநர் சங்கர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 4, 2022, 05:56 PM IST
  • இந்தியன் 2 படத்தில் காஜல் நீக்கம்
  • விரைவில் தொடங்கும் படப்பிடிப்பு
  • பாலிவுட் நடிகையிடம் பேச்சுவார்த்தை
இந்தியன் 2: பாலிவுட் நடிகையை களமிறக்கும் சங்கர்! தாயான நடிகை நீக்கம் title=

இந்தியன் 2 படத்தின் வேலைகள் மீண்டும் தொடங்கியுள்ளன. லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இப்படம், திடீரென விபத்து காரணமாக தடைபட்டது. 2 ஆண்டுகளுக்கு முன்பு ராட்சத கிரேன் சாய்ந்து ஏற்பட்ட அந்த விபத்தில், சூட்டிங் ஸ்பாட்டில் பணியாற்றிக் கொண்டிருந்த தொழில்நுட்ப கலைஞர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக இயக்குநர் சங்கர், கமல்ஹாசன் மற்றும் லைகா நிறுவனத்துக்கு இடையே மனக்கசப்பு உருவானது. இதனால், மேற்கொண்டு படப்பிடிப்புகள் தொடங்கப்படவில்லை. லைகா நிறுவனமும் சங்கர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சங்கரும் பதிலுக்கு லைகா மீது குற்றம்சாட்டி மனு தாக்கல் செய்ததால் முடிவு எட்டப்படாமல் படம் கைவிடப்படும் சூழலுக்கு சென்றது.

இயக்குநர் சங்கரும், ராம் சரண் படத்தை இயக்கிக் கொண்டிருக்க, கமல் விக்ரம் படத்தில் பிஸியானார். அண்மையில் ரிலீஸான விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. வசூலில் சாம்ராஜ்ஜியம் படைத்ததால், அந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் விகரம் படத்தை தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்த உதயநிதி ஸ்டாலின், மீண்டும் இந்தியன் 2 படம் தொடங்கப்படும் என அறிவித்தார்.  சங்கர் மற்றும் லைகா, நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாகவும், விரைவில் படத்தின் சூட்டிங் தொடங்கும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க | விக்னேஷ் சிவன் மனைவியிடம் இருந்து சென்ற மெசேஜ் - குதூகலமான பாலிவுட் பிரபலம்

நடிகர் கமல்ஹாசனும் படத்தின் தயாரிப்புக்காக இப்போது அமெரிக்கா சென்றுள்ளார். மற்ற நடிகர், நடிகைகள் வேறு படங்களில் ஒப்பந்தமாகி இருப்பதால், அவர்களின் வருகையை உறுதி செய்ய படக்குழு நடவடிக்கையை தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், அண்மையில் தாய்மை அடைந்திருக்கும் காஜல் அகர்வால், இந்தியன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு இல்லை என தெரிகிறது. இதனால் அவருக்கு பதிலாக புதிய நடிகையை தேர்வு செய்ய முடிவு செய்திருக்கும் சங்கர், பாலிவுட்டில் இருந்து ஒருவரை கொண்டு வர இருக்கிறார். ரன்வீர் சிங்கின் மனைவியான தீபிகா படுகோனிடம் இதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவும் வாய்ப்புகள் உள்ளன. 

மேலும் படிக்க | பிசாசு -2 படத்தில் ஆண்ட்ரியா நடித்த நிர்வாண காட்சிகள் நீக்கம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News