Chef Damu: சமையல் திருவிழா நடத்தும் ‘குக் வித் கோமாளி’ புகழ் செஃப் தாமு..!

குக் வித் காேமாளி டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான செஃப் தாமு பல  வகையான உணவுகளை வைத்து நடத்தும் சமையல் திருவிழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Jun 24, 2023, 02:28 PM IST
  • குக் வித் கோமாளி பிரபலம் செஃப் தாமு.
  • சமையல் திருவிழாவை நடத்த உள்ளார்.
  • இந்த திருவிழாவில் தாமுவின் ஸ்பெஷல் ரெசிப்பிகள் இடம் பெற உள்ளன.
Chef Damu: சமையல் திருவிழா நடத்தும் ‘குக் வித் கோமாளி’ புகழ் செஃப் தாமு..!  title=

பிரபல சமையல் வல்லுநராக திகழ்பவர், செஃப் தாமு. ரசிகர்கள் பலரை கவர்ந்த டிவி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். இவர் ஒரு உணவுத்திருவிழாவை நடத்த உள்ளார். 

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் செஃப்..

இந்தியாவின் பிரபலமான சமையல் வல்லுநராக திகழும் தாமு, தமிழ்நாட்டை சேர்ந்தவர். கடந்த சில ஆண்டுகளாகவே பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெறும் பல நிகழ்ச்சிகளில் கடந்த சில ஆண்டுகளாக நடுவராக பங்கேற்று வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்த குக் வித் கோமாளி காமெடி-குக்கிங் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று கலக்கி வருகிறார், செஃப் தாமு. சமையல் வல்லுநராக மட்டுமே இருந்து வந்த செஃப் தாமு, குக் வித் காேமாளி நிகழ்ச்சிக்கு பிறகு “தாமு அப்பா”வாக மாறினார்.

மேலும் படிக்க | திண்டுக்கல் லியோனியின் மகன் திரையில் ஜொலித்தாரா? - அழகிய கண்ணே திரைப்பட விமர்சனம்

சமையல் திருவிழா:

சென்னை தி.நகரில் உள்ள கிராண்ட் ஜி.ஆர்.டி. ஹோட்டலில் வரும் ஜூன் 25 ஆம் தேதி முதல் ஜூலை 9 ஆம் தேதி வரை தலைவன் விருந்து என்ற சமையல் திருவிழா 15 நாட்கள் நடக்க உள்ளது. இந்த விழாவில் பிரபல சமையல் கலைஞரான  செஃப் தாமுவின் சமையலும் இணைந்து  தலைவன் விருந்து எனும் சமையல் திருவிழா நடைபெற இருக்கிறது. இந்த விழா ஏற்பாட்டாளர்கள் இது குறித்து கூறுகையில், தலைவன் விருந்து ஒரு அற்புதமான சமையல் அனுபவத்தையும், தென்னிந்திய சமையல்களின் அற்புதமான சுவையையும் வழங்க செஃப் தாமுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறினர். 

செஃப் தாமுவின் பிரபல ரெசிப்பிகள்..

இந்த சமையல் திருவிழாவில்,  தாமு ஸ்டைல் மீன் குழம்பு, சிக்கன் சிந்தாமணி, ஆத்தங்குடி காரி சாப்ஸ், மா இஞ்சி பருப்பு உருண்டை குழம்பு, காலன் கரு மிளகு வருவல், வெற்றிலை ரசம், கரும்பு சாறு பாயாசம் உள்ளிட்டவை இடம் பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லைவாக சமைக்கும் தாமு..

இரவு 7 மணி முதல் 11 மணி வரை இந்த உணவு திருவிழா நடைபெற இருக்கிறது மேலும் செஃப் தாமு அந்த 15 நாட்களும் அங்கே லைவாக சமையல் செய்ய உள்ளார், இவை அனைத்தும் ஜி.ஆர்.டி. ஹோட்டல்ஸ் பஜாரில் டின்னர் பஃபேவில் வழங்கப்பட உள்ளன. இந்த உணவு திருவிழாவின் ஒரு தனித்துவமான அம்சம் செஃப்ஸ் தியேட்டர் ஆகும். இது விருந்தினர்களுக்கு செஃப் தாமுவின் சமையல் திறனை நேரில் காணும் தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது. பங்கேற்கும் விருந்தினர்கள்,  சமையல் செயல் விளக்கங்களோடு, கேள்வி பதில் அமர்வுகள் மற்றும் புகழ்பெற்ற சமையல் களைஞர்களுடன் சமையல் பாடங்களில் பங்கேற்கும் வாய்ப்பையும் பெற இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தலைவன் விருந்து திருவிழா ஞாயிற்றுக்கிழமை தொடங்க உள்ள நிலையில் இன்று அதன் தொடக்க விழா கொண்டாட்டம்  நடைபெற்றது… இதில் தாமுவின் உணவு பிரியர்கள் கலந்து கொண்டு தாமு நேரடியாக செய்த உணவு வகைகளை கண்டு ரசித்தனர்.  மேலும் செப் தாமு அவரது ஸ்டைலில் வர மிளகாய் சிக்கனை அவர்களது உணவு பிரியர்களுக்காக நேரடியாக லைவாகவே செய்து காண்பித்தார்.

மறந்த உணவுகளை மீண்டும் சாப்பிடலாம்..

இந்த விழா குறித்து சமையல் கலைஞர் தாமு பேசினார். அப்போது அவர், 15 நாட்களும் தான் நேரடியாக லைவாக உணவை செய்ய உள்ளதாகவும், இரவு 7 மணி முதல் 11 மணி வரை இந்த உணவு திருவிழா நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும்,  நாம் மறந்த உணவு வகைகளை இந்த உணவு திருவிழாவில் சாப்பிடலாம் என்றும் நாற்பது வகையான உணவுகள் இந்த உணவு திருவிழாவில் பரிமாற இருக்கிறது என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சிக்குள் பல பெண்களுடன் நடனமாடியவாறு செஃப் தாமு எண்ட்ரி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோதா' திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News