தன்னை பற்றிய அவதூறுகளுக்கு பதிலளித்த குக் வித் கோமாளி பாலா!

என்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதற்கு நிறைய செலவு செய்கின்றனர், அதை என்னிடம் கொடுத்தால் முதியோர் இல்லத்தில் மருந்து மாத்திரை வாங்கி தர முடியும் என்று பாலா தெரிவித்தார்.  

Written by - RK Spark | Last Updated : Feb 5, 2024, 07:07 AM IST
  • அவதூறுகளுக்கு குக் வித் கோமாளி பாலா பதிலடி.
  • எனக்காக நிறைய செலவு செய்கின்றனர்.
  • இன்னும் நிறைய உதவி செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
தன்னை பற்றிய அவதூறுகளுக்கு பதிலளித்த குக் வித் கோமாளி பாலா! title=

விஜய் அரசியலுக்கு வருவது குறித்து யோசித்து தான் செய்திருப்பார், எனக்கு அரசியல் ஆசை கிடையாது, என்னைப் பற்றி அவதூறு பரப்புவதற்கு சமூக வலைதளங்களில் செய்யும் செலவை என்னிடம் கொடுத்தால் முதியோர்களுக்கு மருந்து வாங்கி கொடுக்கலாம் என பிரபல நகைச்சுவை நடிகரும் சமூக ஆர்வலருமான குக் வித் கோமாளி பாலா பேட்டி அளித்துள்ளார்.  மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த லட்சுமிபுரத்தில் தனியார் பள்ளி ஆண்டு விழா யூத் அண்ட் இந்தியா என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அயோத்தி திரைப்பட இயக்குனர் திரு மந்திரமூர்த்தி, பிரபல நகைச்சுவை நடிகரும் சமூக ஆர்வலருமான குக் வித் கோமாளி பாலா ஆகியோர் பங்கேற்று பேசினர். பாலாவுடன் பள்ளி சிறுவர் சிறுமியர் போட்டி போட்டுக் கொண்டு செல்பி எடுத்தனர். 

மேலும் படிக்க | Poonam Pandey: இறந்தது போல் நாடகமாடிய பிரபல நடிகை! காரணம் என்ன தெரியுமா?

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாலா, தான் தொடர்ந்து மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஆம்புலன்ஸ்கள் வாங்கி தந்துள்ளதாகவும், இதுவரை ஐந்து ஆம்புலன்ஸ்கள் வாங்கிய நிலையில் மீதமுள்ள ஐந்தையும் விரைவில் வாங்கி தருவேன் என்று தெரிவித்தார், நடிகர் விஜய் அரசியல் ஆரம்பித்தது குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், விஜய் எதை செய்தாலும் யோசித்து தான் செய்வார் என்றும், தனக்கு அரசியல் ஆசை எதுவும் கிடையாது, என்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவதற்கு நிறைய செலவு செய்கின்றனர், அதை என்னிடம் கொடுத்தால் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியோர்களுக்கு மருந்து மாத்திரை வாங்கி தர முடியும் என்று தெரிவித்தார்.

சமீபத்தில் வாணியம்பாடி அருகே நெக்னாமலை கிராமத்திற்க்கு புதிய ஆம்புலன்சை பாலா நேரில் சென்று வழங்கினார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட நெக்னாமலை கிராமம். இந்த கிராமம் கடல் மட்டத்திலிருந்து 1500 அடி  உயரத்தில் அமைந்துள்ளது.  இங்கு 172 குடும்பங்களில் 750 பேர் வசித்து வருகின்றனர்.  478 வாக்காளர்கள் கொண்ட இந்த மலை கிராமத்திற்கு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து இன்று வரை சாலை வசதி இல்லாததால் தொடர்ந்து மக்கள் அன்றாட தேவைக்கும் மற்றும் மருத்துவ தேவைக்கும் 7 கிலோமீட்டர் நடந்தே சென்று வரக்கூடிய சூழ்நிலையாக உள்ளது.  அதே நேரத்தில் கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவ வலி ஏற்பட்டாலும் சரி, உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் சரி டோலி கட்டி தூக்கிச்செல்லும் அவல நிலையும் தொடர்ந்து வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெண் ஒருவர் பிரசவ வலி காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் அவரை டோலி கட்டி தூக்கி சென்று அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். இது குறித்து சமூக வேலை தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியானது. இதனை அறிந்த சின்னத்திரை நடிகர் பாலா நெக்நமலை கிராமத்திற்கு நேரில் சென்றார். அங்கே அவருக்கு மலை கிராம மக்கள் பட்டாசு வெடித்தும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து கிராமத்திற்கு பயன்படுத்தும் வகையில் புதிய ஆம்புலன்ஸ் ஒன்று வழங்கினார்.

மேலும் படிக்க | Indraja Shankar: ரோபோ சங்கர் மகளின் நிச்சயதார்த்த விழா! வைரலாகும் புகைப்படங்கள்..

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News