கோப்ரா படத்துக்கு இப்போதே கிடைத்த அங்கீகாரம் - படக்குழு மகிழ்ச்சி

ரஷ்ய அதிபர் புதின் மாளிகையில் கோப்ரா படத்தின் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 24, 2022, 05:09 PM IST
  • கோப்ரா படத்தின் டீசருக்கு ஒரு மில்லியன் லைக்குகள்
  • விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்திருக்கும் படம்
  • புடின் மாளிகையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது
கோப்ரா படத்துக்கு இப்போதே கிடைத்த அங்கீகாரம் - படக்குழு மகிழ்ச்சி  title=

சியான் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘கோப்ரா’. இயக்குநர் அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்கியுள்ளார். டிமாண்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அவர், இப்போது விக்ரம்-ஐ வைத்து கோப்ராவை உருவாக்கியுள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

மேலும் படிக்க | KGF-2 படத்தால் நின்றுபோன புஷ்பா-2: காரணம் தெரிஞ்சா ‘ஷாக்’ ஆகிடுவீங்க!

பல்வேறு கெட்டப்புகளில் விக்ரம் நடித்திருக்கும் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட அதிரா பாடலும் பெரிய ஹிட் அடித்துள்ளதால் மகிழ்ச்சியில் இருக்கும் படக்குழுவுக்கு, கூடுதல் மகிழ்ச்சியான செய்தி ஒன்று கிடைத்துள்ளது. புத்தாண்டையொட்டி ஜனவரி 9 ஆம் தேதி வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசருக்கு ஒரு மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளன. 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள கோப்ரா படத்தின் டீசருக்கு இவ்வளவு லைக்குகள் கிடைத்திருப்பது தயாரிப்பு நிறுவனத்துக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

படத்தின் மீதான எதிர்பார்ப்பையே இது காட்டுவதாகவும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ கூறியுள்ளது. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியா ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்தராஜ், கே.எஸ்.ரவிக்குமார், பூவையார் மற்றும் ரோபோ சங்கர் உள்ளிட்ட பிரபலங்களும் படத்தில் நடித்துள்ளனர். கோப்ரா படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு, படம் ஓடிடியில் வெளியாவதாக தகவல் பரவிய நிலையில், அதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக மறுத்திருந்தது. இந்நிலையில், விரைவில் அடுத்த அப்டேட்டுகளை கொடுக்கவும் படக்குழு தயாராகி வருகிறது. 

மேலும் படிக்க | கமல்- சூர்யாவை இணைக்கும் விக்ரம்- புதிய அப்டேட்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News