தளபதி 63: ஓப்பனிங் சாங் உருவாக்கம் பற்றி புதிய தகவல்!!

தளபதி 63 படத்தின் ஓப்பனிங் சாங் உருவாக்கம் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

Last Updated : Feb 12, 2019, 02:32 PM IST
தளபதி 63: ஓப்பனிங் சாங் உருவாக்கம் பற்றி புதிய தகவல்!! title=

தளபதி 63 படத்தின் ஓப்பனிங் சாங் உருவாக்கம் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஜயை வைத்து தெறி, மெர்சல் ஆகிய படங்களை இயக்கிய அட்லி, மீண்டும் விஜயை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார். 

இதன் படப்பிடிப்பு சென்னையில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வருகிறது. நயன்தாரா, கதிர், யோகி பாபு, விவேக் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யின் அறிமுகக் காட்சியை எப்படி படமாக்கியுள்ளனர். அப்போது யோகி பாபு பேசும் வசனம் என்ன என்பது பற்றி இணையத்தில் செய்தியாக வெளியானது. இதனை விஜய் ரசிகர்கள் பலரும் பகிர தொடங்கினார்கள். 

அதனைத் தொடர்ந்து 100 குழந்தைகளுடன் விஜய்யின் அறிமுக பாடலை படக்குழு படமாக்கியுள்ளது. சுமார் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை விஜய்யின் அறிமுக பாடலில் ஆட வைக்க அட்லி முடிவு செய்தாராம். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தத் திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News