நயன்-விக்னேஷ் ஜோடி! களைகட்டும் கல்யாண கொண்டாட்டம்!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி இன்று திருமணம் செய்து கொள்கின்றனர்.  

Written by - RK Spark | Last Updated : Jun 9, 2022, 10:44 AM IST
  • சென்னையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி இன்று திருமணம்.
  • முக்கிய நட்சத்திரங்கள் திருமணத்தில் பங்கேற்பு.
  • யாருக்கும் புகைப்படம் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை.
நயன்-விக்னேஷ் ஜோடி! களைகட்டும் கல்யாண கொண்டாட்டம்! title=

கோலிவுட்டில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரின் திருமண கொண்டாட்டம் தொடங்கிவிட்டது.  நிச்சயதார்த்தையும், திருமணத்தையும் எளிய முறையில் இந்த ஜோடி நடத்துகிறது. திருமணத்தில் பங்கேற்பவர்கள் மொபைல்களில் புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. ஜூன்-9ம் தேதியான இன்றைய தினம் நயன்-விக்கி ஜோடியின் திருமணமும், ஜூன்-10ம் தேதியான நாளைய தினம் திருமண வரவேற்பு விழாவும் நடைபெறுகிறது.  மெஹந்தி நிகழ்ச்சியுடன் இவர்களது திருமண கொண்டாட்டம் ஆரம்பமானது, அதில் கிட்டத்தட்ட 100 நபர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் படிக்க | விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்!

வாட்டர் பாட்டில்களில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் விதவிதமான புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன, மேலும் அதில் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் என்கிற பெயரும் இடம்பெற்றுள்ளது.  அதிகாலை முதலே திருமணத்திற்கு பல பிரபலங்கள் வர தொடங்கிவிட்டனர்.  இதில் மணிரத்னம், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி மற்றும் பொன்வண்ணன் போன்ற நட்சத்திரங்கள் குடும்பத்துடன் பங்கேற்றுள்ளனர்.  இவர்களது திருமணம் நடைபெற சில மணி நேரங்கள் உள்ள நிலையில் விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இதயபூர்வமான சில வார்த்தைகளையும் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

கடற்கரை மற்றும் பல்வேறு வழித்தடங்கள் வழியாக திருமணத்திற்கு அழைப்பு விடுக்காத மற்ற நபர்கள் திருமணம் நடைபெறும் பகுதிக்குள் நுழைந்திடாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.  இதில் கலந்துகொள்ள பத்திரிக்கையாளர்களுக்கு கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.  இதுவரை இந்த இருவரை காதலர்களாக பார்த்த பலரும், இவர்களை கணவன் மனைவியாக திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பார்ப்பதில் ரசிகர்கள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க | 1 லட்சம் பேருக்கு கல்யாண விருந்தளிக்கும் நயன்தாரா-விக்னேஷ் சிவன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News