BB7 Contestants Salary: இதுதாங்க பிக்பாஸ் போட்டியாளர்களின் உண்மையான சம்பளம்

Bigg Boss 7 Tamil Salary Details : பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களின் உண்மையான சம்பள விவரத்தை விரிவாக இந்த கட்டுரையில் நாம் காணலாம்.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Oct 8, 2023, 07:59 PM IST
  • பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களின் சம்பள விவரம்.
  • இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
  • கூல் சுரேஷின் ஒரு நாள் சம்பளம் 18 ஆயிரம் ரூபாய் ஆகும்.
BB7 Contestants Salary: இதுதாங்க பிக்பாஸ் போட்டியாளர்களின் உண்மையான சம்பளம் title=

பிக் பாஸ் 7 தமிழ் போட்டியாளர்களின் சம்பள விவரம்: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் அக்டோபர் 1 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார்.எல்லா சீசனிலும் ஒரே வீட்டில் தான் போட்டியாளர்கள் வசிப்பார்கள். இந்த முறை சற்று வித்தியாசமாக இரண்டு வீடுகள் உள்ளது. எனவே பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர்களின் சம்பள விவரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

விஜய் டிவி:
பிக்பாஸ் (Bigg Boss Tamil 7) நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்ச்சி பிரம்மாண்டமாக ஆரம்பித்துள்ளது. இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல கமல்ஹாசன் (Kamal Haasan) தொகுத்து வழங்கினார். இதில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்று வருகின்றனர். அதன்படி இதில் கூல் சுரேஷ் (Cool Suresh), பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா தேவி, மணிச்சந்திரா, அக்‌ஷயா உதயகுமார், விகா விஜயகுமார், ஐஷு,  விஷ்ணு விஜய், மாயா கிருஷ்ணன், சரவண விக்ரம், யுகேந்திரன், விசித்ரா, பவா செல்லதுரை, அனன்யா ராவ், விஜய் வர்மா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். 

மேலும் படிக்க | கார்த்திகை தீபம்: அபிராமியை அடித்து தூக்க பிளான் போடும் ஐஸ்வர்யா

முதல் நாமினேஷன்:
இதையடுத்து, இந்த வாரத்திற்கான நாமினேஷனில், ஐஷு, அனன்யா, ரவீனா, ஜோவிகா, யுகேந்திரன், பிரதீப் மற்றும் பவா செல்லதுரை ஆகிய 7 பேர் இடம்பெற்றுள்ளனர். நாமினேஷன் அறிவிக்கப்பட்டதில் இருந்தே, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முதல் போட்டியாளர் யார் என்பது பற்றிய விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடந்து வருகின்றன.

போட்டியாளர்களின் சம்பள விவரம்:
இந்நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களின் உண்மையான சம்பள விவரம் வெளியாகியுள்ளது. இதன் முழு விவரத்தை விரிவாக இந்த கட்டுரையில் நாம் காணலாம்.

நடிகர் கூல் சுரேஷ்: நடிகர் கூல் சுரேஷின் ஒரு நாள் சம்பளம் 18 ஆயிரம் ரூபாய் ஆகும்.

பிரபல யூடியூபர் பூர்ணிமா ரவி: யூடியூப் பிரபலம் பூர்ணிமா ரவியின் ஒரு நாள் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் ஆகும்.

சீரியல் நடிகை ரவீனா: மௌன ராகம் சீரியல் மூலம் பிரபலமான ரவீனாவின் ஒரு நாள் சம்பளம் 18 ரூபாய் ஆகும்.

கவினின் நண்பர் பிரதீப் ஆண்டனி: நடிகர் கவினின் நண்பரும் நடிகருமான பிரதீப் ஆண்டனியின் ஒரு நாள் சம்பளம் ரூபாய் 20 ஆயிரம் ஆகும்

ராப் பாடகர் நிக்சன்: ராப் பாடகர் நிக்சனின் ஒரு நாள் சம்பளம் 13 ஆயிரம் ரூபாய் ஆகும்.

சீரியல் நடிகை வினுஷா தேவி: பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த வினுஷா தேவியின் ஒரு நாள் சம்பளம் 20 ஆயிரம் ரூபாய் ஆகும்.

நடன கலைஞர் மணிச்சந்திரா: கிங் ஆஃப் டான்ஸ், ஜோடி ஆகிய நிகழ்ச்சிகளில் பங்குபெற்ற நடன கலைஞர் மணிச்சந்திராவின் ஒரு நாள் சம்பளம் 18 ரூபாய் ஆகும்.

நடிகை அக்ஷயா: லவ் டுடே படத்தில் ஹீரோயின் தங்ககையாக நடித்த நடிகை அக்ஷயா உதயகுமாரின் ஒரு நாள் சம்பளம் 15 ஆயிரம் ரூபாய் ஆகும்.

வனிதாவின் மகள் ஜோவிகா: வனிதாவின் மகள் ஜோவிகாவின் ஒரு நாள் சம்பளம் 13 ஆயிரம் ரூபாய் ஆகும்.

நடன கலைஞர் ஐஷு: ஐஷு, ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

சீரியல் நடிகர் விஷ்ணு: ஆஃபிஸ் சீரியல் விஷ்ணுவின் ஒரு நாள் சம்பளம் ரூபாய் 25 ஆயிரம் ஆகும்.

விக்ரம் நடிகை மாயா கிருஷ்ணன்: விக்ரம் நடிகை மாயா கிருஷ்ணனின் ஒரு நாள் சம்பளம் 18 ஆயிரம் ரூபாய் ஆகும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் சரவணன் விக்ரம்: பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் சரவணன் விக்ரம் ஒரு நாளைக்கு 18 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

நடிகர் யுகேந்திரன்: மலேசியா வாசுதேவனின் மகன் நடிகர் யுகேந்திரனின் ஒரு நாள் சம்பளம் 27 ஆயிரம் ரூபாய் ஆகும்.

நடிகை விசித்ரா: பிரபல நடிகை விசித்ராவின் ஒரு நாள் சம்பளம் 27 ஆயிரம் ரூபாய் ஆகும்.

எழுத்தாளர் பவா செல்லதுரை: பிரபல எழுத்தாளர் பவா செல்லதுரை ஒரு நாளைக்கு 28 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

அனன்யா ராவ்: அனன்யா ராவின் ஒரு நாள் சம்பளம் 12 ஆயிரம் ரூபாய் ஆகும்.

பின்னணி நடன கலைஞர் விஜய் வர்மா: தலைவா படத்தின் பின்னணி நடன கலைஞர் விஜய் வர்மா ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

மேலும் படிக்க | 30 ஆயிரம் தியேட்டரில் லியோ.. தயாரிப்பாளர் சொன்ன சீக்ரெட்! சுத்துபோட்ட நெட்டிசன்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News