பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம் "பைரவா". இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இரு தனியார் வங்கியிடம் லோன் வாங்கிட்டு ராவடி செய்யும் ரவுடிகளிடம் வசூல் செய்வதில் கில்லியான பேங்க் கலெக்ஷன் ஏஜெண்ட் விஜய்.
விஜயின் வங்கி அதிகாரி ஒய். ஜி. மகேந்திரன் வீட்டு திருமண நிகழ்வு ஒன்றில் கீர்த்தி சுரேஷை கண்டதும் காதல் கொள்கிறார். கீர்த்தி சுரேஷிடம் தனது காதலை சொல்வதற்காக முயற்சிக்கும் விஜய், கீர்த்தி சுரேஷை சுற்றி இருக்கும் ஆபத்தையும், அதன் பின்னணி மற்றும் அதற்கு காரணமானவர்களைப் பற்றி தெரிந்துக்கொள்கிறார்.
கீர்த்தி சுரேஷிடம் காதலை சொல்வதுடன், அவரது ஆபத்துக்கு காரணமானவர்களை எதிர்த்து அவருடன் திருநெல்வேலிக்கு செல்லும் விஜய், அவர்களை எப்படி வீழ்த்தினார், அவர்களுக்கும் கீர்த்தி சுரேஷுக்கு என்ன சம்மந்தம், என்பது தான் பைரவா படத்தின் மீதிக் கதை.
இப்படத்தில் விஜய் அறிமுக காட்சியில் கிரிக்கெட் பேட் வைத்து வில்லன்களை பதம் பார்ப்பது, கல்யாண நிகழ்வில் விஜய் கொடுக்கும் எக்ஸ்பிரஷன் மற்றும் வில்லன்களிடம் பேசும் வசனங்கள் போன்றவை இப்படத்துக்கு ரசிக்கும்படியாக செய்திருக்கிறார்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதையாக இருந்தாலும், திரைக்கதையில் ஓரம் கட்டப்பட்டுள்ள கீர்த்தி சுரேஷ், விஜயுடன் இப்படத்தில் ரெகுலரான நடிப்பை வெளிக்காட்டியிருக்கிறார்.
வில்லனாக வரும் ஜெகபதிபாபு, அவருக்கு அடுத்தபடியாக டேனியல் பாலாஜி. இருவரும் திருநெல்வேலி ரவுடிகளாக காட்டப்பட்டிருக்கிறார். டேனியல் பாலாஜி ஓரளவு மட்டுமே. தம்பி ராமையா பெயருக்கு மட்டுமே இருந்தாலும், சதிஷின் கவுண்டர்களும், அதற்கு விஜய் கொடுக்கும் பதிலும் சிரிக்க வைக்கிறது.
விஜயின் ரசிகர்களுக்கு மட்டும் இன்றி சினிமா ஆடியன்ஸுக்கும் பிடிக்கும் விதத்தில், ஆரம்ப திரைக்கதை அமைந்தாலும், இரண்டாம் பாதியில் கொஞ்சம் படத்தை பலவீனமடையச் செய்கிறது. இருப்பினும், விஜய் தனது பர்பாமன்ஸ் மற்றும் வசனங்கள் மூலம் அந்த இடங்களில் ரசிகர்களை எண்டெர்டெயின்மென்ட் செய்ய முயற்சி செய்துள்ளார்.
ஜெகதிபாபு பிரதமரை கொலை செய்யப் போவதாக சொல்லி, அவரை போலீஸிடம் விஜய் மாட்டிவிடுவது, லாஜிக் இல்லாத பாகமாக காணப்பட்டது.
இதுபோன்ற சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் மாணவர்கள் மற்றும் குடும்பம் பற்றிய வசனங்கள் என்று படத்தை பாராட்டுவதற்கான அம்ஷங்களும் உண்டு.
ஆகமொத்தத்தில் பைரவா குடும்பத்தோடு பார்க்ககூடிய கமர்ஷியல் படம்.
ரசிகர்கள் வரவேற்ப்பு:-
நேற்று உலகமெங்கும் வெளியான பைரவா படம் திரை அரங்குகளில் ஹவுஸ்புல்லாக காணப்பட்டது. டெல்லியில் அனைத்து திரை அருங்களில் ஹவுஸ்புல். தமிழ் மக்கள் மட்டும் இல்லாமல் மொழி தெரியாத விஜயின் ஹிந்தி ரசிகர்களும் இந்த படத்தை கான வந்தார்கள்.
விஜய் என்ட்ரி ஆகும் காட்சிகளில் விசில் பறக்க வரவேற்றனர். படம் முடிந்த பின் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றாலும் விஜயின் நடிப்பு, வசனம் போன்றவை ராசிகளை எண்டெர்டெயின் செய்தது.