Bigg Boss Tamil 6: அசீம் அமுதவாணன் இடையே தகராறு, வைரலாகும் வீடியோ இதோ!

இந்த வாரம் சற்று சலசலப்பும், சண்டையும் அதிகமாகும் நிலையில், தற்போது நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமுதவாணனை அடித்த அசீம்முக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 1, 2022, 01:08 PM IST
  • அமுதவானனை தாக்கினாரா அஸீம் ?
  • வைரலாகும் முழு வீடியோ இதோ.
  • கொதிக்கும் நெட்டிசன்ஸ்கள்.
Bigg Boss Tamil 6: அசீம் அமுதவாணன் இடையே தகராறு, வைரலாகும் வீடியோ இதோ! title=

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்து, தற்போது இந்நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.  கடந்த மாதம் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் -6 நிகழ்ச்சியிலிருந்து இதுவரை 7 போட்டியாளர்கள் வெளியேறிவிட்டனர்.  முதலில் ஜி.பி.முத்து தானாகவே முன்வந்து விலகினார், அவரை தொடர்ந்து சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, நிவாஷினி, மகேஸ்வரி, உள்ளிட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதற்கிடையில் சென்ற வாரம் நடைபெற்ற எவிக்‌ஷனில் ராபர்ட் மாஸ்டர் வெளியேறி இருக்கிறார். இதற்கிடையில் இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் தனலட்சுமி, ஜனனி, மைனா, ரச்சிதா, குயின்சி, கதிரவன் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். மேலும் இந்த வார கேப்டனாக அஜீம் தேர்வாகி உள்ளார். இதனிடையே பிக்பாஸ நிகழ்ச்சியில் பங்கேற்றதில் இருந்தே சக போட்டியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார் அசீம். அதோடு சக போட்டியாளர்களையும் மிகவும் தரக்குறைவாக பேசி வருகிறார் அசீம்.

 மேலும் படிக்க | நயன்தாராவை போல் இருக்கும் அவரது ரீல் மகள்...வாவ் வாட் அ ப்யூடி..

இந்த நிலையில் அதோடு சக போட்டியாளர்களையும் மிகவும் தரக்குறைவாக பேசி வருகிறார் அசீம். இந்த டாஸ்க்கின் போது அசீம் – அமுதவாணனின் சண்டை குறித்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி அந்த வீடியோவில் ஏலியனாக உள்ள அமுதவாணன், பழங்குடி இன மக்களில் ஒருவரான கதிரை பிடிக்கிறார். அப்போது உள்ளே வந்த அசீம் அமுதவாணனை ஆக்ரோஷமாக அடித்து தள்ளி விடுகிறார். அமுதவாணன் என்னை அடித்தாய் என அசீம்மிடம் கூற, நெஞ்சில் உரம் இருந்தால் என்னை அடிடா என ஆவேசமாக கத்துள்ளார்.

தற்போது இந்த வீடியோ வைரலாகி வருவதுடன் இந்த காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள், அமுதவாணனை அடித்த அசீம்முக்கு ரெட் கார்டு கொடுத்தே தீர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க | மனைவி வெளியிட்ட நிர்வாண புகைப்படம்! பின்னணியை உடைத்த விஷ்ணு விஷால்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News