பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் என்றாலே, இந்தியாவில் பாலிவுட் படங்கள் தான் என்ற நிலைமை இருந்தது. பல சூப்பர் ஹிட்களை பெற்ற பாலிவுட் டவுனில் கடந்த சில ஆண்டுகளாக சரியான வெற்றிப் படங்கள் இல்லை. குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கான வெற்றிகள் இல்லாததால், பாலிவுட் நிலைமை இப்போது பின்தங்கிக் கொண்டிருக்கிறது. சின்ன ஹீரோக்களின் படங்கள் மட்டுமல்ல, ஸ்டார் ஹீரோக்களின் படங்களும் கூட குறைந்தபட்சம் பாசிட்டிவ் டாக்கைப் பெற முடிவதில்லை. அதேநேரத்தில் தற்போது தென்னிந்திய படங்கள் வடமாநிலங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்திய அளவில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான தென்னிந்திய படங்கள் வசூலை அள்ளியது. தற்போது பாலிவுட் திரையுலகில் தென்னிந்தியத் திரைப்படங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. தென்னிந்திய திரைப்படங்கள் ஏன் பிளாக்பஸ்டர் ஹிட்களைப் பெறுவதில்லை (பாலிவுட் vs தென் சினிமா) என்ற கேள்விக்கு இயக்குனர் அனுராக் காஷ்யப் அதிர்ச்சியூட்டும் கருத்துக்களை தெரிவித்தார்.
மேலும் படிக்க | ஏகே அஜித் என்ட்ரி.... திருவிழாக்கோலம் ஆன திருச்சி
பொதுவாக பாலிவுட் படங்கள் அண்மைக்காலமாக பின்தங்கியிருக்கும் நிலையில், அனைத்து தென்னந்திய திரைப்படங்களும் வெற்றி பெறுவதில்லை என்பதை இயக்குநர் அனுராக் காஷ்யப் சுட்டிக்காட்டியுள்ளார். ஹிந்தி பேசத் தெரியாதவர்கள் படம் தயாரிக்கிறார்கள். பாலிவுட் துறையில் சரியான வெற்றி கிடைக்காததற்கு இதுவே முக்கிய காரணம். தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களைப் பார்க்கும்போது, அவர்களின் கலாச்சாரத்தில் வாழ்கிறார்கள். அவர்கள் தங்கள் கலாச்சாரத்தையும் மொழியையும் பற்றிக் கொள்கிறார்கள். இது அவர்களுக்கு சாதகமாக இருக்கிறது.
அண்மைக்காலமாக பாலிவுட் படங்கள் தோல்வியடைவதற்கு இதுவே முக்கிய காரணம் எண்ணுகிறேன். சாதாரணமான படங்களை எடுப்பதைவிடுத்து புதிய முயற்சிகளில், புதுமையான கோணங்களில் படத்தை சொல்லும்போது அந்த படங்கள் வெற்றி பெறும். தென்னிந்திய படங்களில் அத்தகைய அணுகுமுறைகள் இருக்கின்றன. ஆனால், பாலிவுட் உலகில் ஒரே மாதிரியான படங்கள் ரிலீஸாவதால் வெற்றி பெறுவது சாத்தியமில்லாமல் போகிறது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | விஜய் சேதுபதியின் ரியல் ’ஜானு’ குறித்த சுவாரஸ்ய தகவல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ