மலையாள திரையுலகில் வித்தியாசமான கதைக்களத்துடன் நல்லதொரு வரவேற்பை பெற்ற படம் தான் "ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5 .25". இதனை ரத்தீஷ் பாலகிருஷ்ணன் பொடுவாள் இயக்கி இருந்தார். மக்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எவ்வளவு தான் தொழில்நுட்பம் மெருகேறினாலும் இறுதியில் மனிதரும் மனித நேயமும் தன தான் மிஞ்சும் என்பதை எடுத்துக்காட்டிய படம்.
மலையாள திரையுலகில் பல விருதுகளையும் இப்படம் வென்றுள்ளது. இவ்வாறு பல வரவேற்பையும், நேர்மறை விமர்சனங்களையும் கொண்ட இந்த படத்தின் மீது ஒரு புகார் எழுந்துள்ளது. அதாவது இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க திருடப்பட்டது. இதனை பாலகிருஷ்ணன் திருடிவிட்டதாக கலாச்சாரத்துறை அமைச்சர் ஷாஜி ஷெரியனிடன் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2012-ம் ஆண்டு ஷேக் ஷ்ரேயார் இயக்கத்தில், கிறிஸ்தோபர் போர்டின் கதையம்சத்தில் வெளியான அமெரிக்க திரைப்படம் தான் "ROBOT AND FRANK". இந்த படத்தின் காட்சிகளை தான் "ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5 .25" படத்தில் காபி அடித்துள்ளனர். இந்த படங்களை பார்த்த பலரும் இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தி இருக்கின்றனர்.
மேலும் இந்த படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு தேசிய விருதினையும் வென்றுள்ளது. மேலும் இப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மீது புகார் எழுந்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
ALSO READ விரைவில் காதலரை அறிமுகம் செய்யப்போகும் நடிகை கங்கனா ரணாவத்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR