AK61 அப்டேட்: ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் தேதி!

அஜித்குமார் நடிக்கும் ஏகே 61 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் தேதி கசிந்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 7, 2022, 04:36 PM IST
  • ஏகே 61 படத்தின் புதிய அப்டேட்
  • ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் தேதி
  • பொங்கலுக்கு படம் வெளியிட திட்டம்
AK61 அப்டேட்: ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் தேதி! title=

வலிமை திரைப்படத்திற்குப் பிறகு அஜித்குமார் மற்றும் ஹெச்.வினோத் கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் ஏகே 61. வங்கிக் கொள்ளையை அடிப்படையாக வைத்து உருவாகும் திரைப்படம் என கூறப்படும் நிலையில், முதல்கட்ட சூட்டிங் ஹைதராபாத்தில் நிறைவடைந்துள்ளது. வலிமை முடித்த கையோடு தொடங்கப்பட்ட ஏகே 61 படத்தில் பிஸியாக நடித்த அஜித்குமார், இடையே கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க | முதல் முதலாக வெளியான விஜய்யின் மச்சினிச்சி புகைப்படம்! இணையத்தில் வைரல்!

பைக்கில் இந்தியாவை சுற்றிய அவர், தற்போது ஐரோப்பிய பயணத்தில் இருக்கிறார். இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருக்கும் முக்கிய இடங்களுக்கு நண்பர்களுடன் சென்றார். அங்கு பிரபலமான இடங்களுக்கு செல்லும்போது ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. விரைவில் ஐரோப்பிய பயணத்தை முடிக்க இருக்கும் அவர், இந்தியா திரும்பிய ஏகே 61 படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்புகளில் பங்கேற்க இருக்கிறார்.

பூனேவில் இரண்டாவது ஷெட்யூல் படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன. அஜித் பேராசிரியர் என்றும், அவருக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆண்டு தீபாவளி அல்லது பொங்கல் ரிலீஸாக ஏகே 61 வெளியிடவும் படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. ஆகஸ்ட் 13 ஆம் தேதி ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. அதேநேரத்தில் படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. ஏகே 61 படத்துக்குப் பிறகு விக்னேஷ் சிவனுடன் இணைய இருக்கிறார் அஜித். அதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. 

மேலும் படிக்க | வாரிசு படத்தின் கதை இது இல்ல பாஸ்! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News